ஜம்மு காஷ்மீரில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து 11 பேர் பலி 

ஜம்மு காஷ்மீரில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகினர். 
ஜம்மு காஷ்மீரில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து 11 பேர் பலி 

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகினர். 

ஜம்மு காஷ்மீரில் இமயமலை அடிவாரத்தில் உள்ள படேர் பகுதியில் சண்டி தேவி கோவில் அமைந்துள்ளது. வருடா வருடம் ஜூலை மாத  இறுதியில் துவங்கி 40 நாட்கள் பக்தர்கள் இயங்கு யாத்திரையாக வருவது வழக்கம். இது 'மச்சல் மாதா யாத்திரை' என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் 'மச்சல் மாதா'  யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகினர். 

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் காவல்துறை கண்காணிப்பாளர் வைத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வர் பகுதியில் இருந்து படேர் பகுதிக்கு செல்லும் சாலையில், 28 கிலோமீட்டர் தொலைவில் மச்சல் மாதா'  யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற வாகனம் செனாப் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகியுள்ளனர். உயிர் தப்பிய ஐந்து வயது குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளது. 11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com