ம.பி.யில் இழுபறி; ராஜஸ்தானில் காங்கிரஸ்: வாக்கு கணிப்பு முடிவு

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்றும், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக-காங்கிரஸ்
ம.பி.யில் இழுபறி; ராஜஸ்தானில் காங்கிரஸ்: வாக்கு கணிப்பு முடிவு


ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்றும், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்றும் வாக்கு கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், மிúஸாரமில் மிúஸா தேசிய முன்னணி ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான், தெலங்கானாவில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் 5 மாநில தேர்தல் குறித்து பல்வேறு அமைப்புகள் நடத்திய வாக்கு கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
காங்கிரஸுக்கு வாய்ப்பு: 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில், காங்கிரஸ் 119-141, பாஜக 55-72 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே-ஆக்ஸிஸ் நடத்திய வாக்கு கணிப்பு தெரிவிக்கிறது. இதேபோல், காங்கிரஸ் 105, பாஜக 85 இடங்களில் வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ்-சிஎன்எக்ஸின் வாக்கு கணிப்பு தெரிவித்துள்ளது.
இழுபறி...: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும்போட்டி நிலவும் என்று வாக்கு கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் 95-115, பாஜக 108-128 இடங்களில் வெற்றி பெறும் என்று ரிபப்ளிக் டிவி-ஜன் கி பாத் அமைப்பின் வாக்கு கணிப்பு தெரிவிக்கிறது. இதேபோல், காங்கிரஸ் 104-122, பாஜக 102-120 இடங்களில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே -ஆக்ஸிஸ் அமைப்பு கணித்துள்ளது. எனினும், மத்தியப் பிரதேசத்தில் பாஜக 126 இடங்களில் வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ்- சிஎன்எக்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. 
சத்தீஸ்கரில்..: சத்தீஸ்கர் மாநிலத்தில், இந்த முறை காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும். மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் காங்கிரஸ் 45-50, பாஜக 35-43 இடங்களில் வெற்றி பெறும் என்று ரிபப்ளிக்-சி வோட்டர் நடத்திய வாக்கு கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ்-சிஎன்எக்ஸ் அமைப்பும், காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று இந்தியா டுடே-ஆக்ஸிஸ் அமைப்பும் தெரிவித்துள்ளன. அஜித் ஜோகி-மாயாவதி கூட்டணி 3-8 தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜக அல்லது காங்கிரஸ் ஆட்சியமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று தெரிகிறது.
மீண்டும் டிஆர்எஸ்: தெலங்கானா மாநிலத்தில், சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று பெரும்பாலான வாக்கு கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில், டிஆர்எஸ் கட்சி 50-65 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ் ஆகியவை தெரிவித்துள்ளன. காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி 41, பாஜக 6 இடங்களில் வெற்றி பெறும் என்று அந்த அமைப்புகள் கணித்துள்ளன.
மிஸோரமில்...: காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் 4 மாநிலங்களில் ஒன்றான மிúஸாரமில், இந்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி வாய்ப்பை இழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மிúஸாரமில், காங்கிரஸ் 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும், மிஸோரம் தேசிய முன்னணி 20 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com