மாநிலங்களவை திமுக குழுத் தலைவரான கனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது 

திமுக மகளிர் அணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனிமொழிக்கு 2016-ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது வழங்கப்பட உள்ளது. 
மாநிலங்களவை திமுக குழுத் தலைவரான கனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது 

புது தில்லி: திமுக மகளிர் அணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனிமொழிக்கு 2016-ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது வழங்கப்பட உள்ளது. 

லோக்மால்ட் என்னும் தனியார் செய்தி நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. 

அந்த வகையில்  2016-ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது கனிமொழிக்கு வழங்கப்பட உள்ளது. 

இதுதொடர்பாக லோக் மால்ட் செய்தி நிறுவன தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் தர்தா செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டாதாவது:

லோக்மால்ட் செய்தி நிறுவனம் சார்பில், ‘நாடாளுமன்ற விருதுகள்’ இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மாநிலங்களவையின் 2018-ம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விருது வழங்கும் விழாவானது வருகிற டிசம்பர் 13-ந்தேதி மாலை 6 மணிக்கு தில்லி, அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும். இந்த விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு விருதுகளை வழங்குகிறார்.

நாடாளுமன்றத்தில் கனிமொழி கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான வகையில் பங்காற்றியதற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்ததற்காகவும் அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

கனிமொழியின் நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றவர்களுக்கும் ஊக்கமாகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக உந்து சக்தியாகவும் திகழ்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com