தேர்தல் முடிவுகள் மோடி அரசை பாதிக்காது: மத்திய அமைச்சர் விளக்கம்

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மோடி தலைமையிலான மத்திய அரசை பாதிக்காது என மத்திய அமைச்சர் ஷ்ரீபத் நாயக் தெரிவித்தார். 
தேர்தல் முடிவுகள் மோடி அரசை பாதிக்காது: மத்திய அமைச்சர் விளக்கம்

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மோடி தலைமையிலான மத்திய அரசை பாதிக்காது என மத்திய அமைச்சர் ஷ்ரீபத் நாயக் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தேர்தல் முடிவுகளானது அந்தந்த மாநிலங்களின் பிரதிபலிப்பாகும். எனவே இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை எவ்விதத்திலும் பாதிக்காது. கடந்த 3 முறையாக ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு எதிராக மக்களின் மனநிலை உள்ளதும் இதற்கு முக்கிய காரணமாகும். 

இருப்பினும் இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஆராயப்பட வேண்டியது அவசியமாகும். இதில் ஜனநாயக ரீதியில் மக்களின் முடிவுகளை நாம் ஏற்றுக்கொண்டு வரவேற்க வேண்டும். அவ்வகையில் இந்த முடிவுகளை பாஜக ஏற்றுக்கொள்கிறது. 

வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஜனநாயகத்தில் வெற்றியும், தோல்வியும் சமமானது. இதை அனைத்து கட்சிகளும் சந்திக்கக் கூடியதுதான். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாஜக இருந்த நிலையில் தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ளது. எனவே இந்த தோல்வி குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com