சத்தீஸ்கர் முதல்வர் பதவிக்கும் நீடிக்கும் சஸ்பென்ஸ் 

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போல் சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷயத்திலும் காங்கிரஸ் கட்சிக்குள் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 
சத்தீஸ்கர் முதல்வர் பதவிக்கும் நீடிக்கும் சஸ்பென்ஸ் 


ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போல் சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷயத்திலும் காங்கிரஸ் கட்சிக்குள் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதில் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் தேர்வு செய்வது தொடர்பான இறுதி முடிவை ராகுல் காந்தியே எடுப்பார் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில முதல்வர் தேர்வு தொடர்பான இறுதி முடிவையும் ராகுல் காந்தியே எடுப்பார் என்று தெரிகிறது. 

புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுடனான சந்திப்புக்காக வந்திருந்த மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மல்லிகார்ஜுன் கார்கே செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாங்கள் எங்களது சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கவேண்டும். அதன் பிறகு தான் முடிவு செய்யப்படும்" என்றார். 

சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் புபேஷ் பாகெல் முதல்வர் ஆக்கப்படுவாரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது, "ஒரு பெயரை மட்டும் குறிப்பிட்டு கேட்கவேண்டாம். எங்களுக்கு ஒரு நடைமுறை உள்ளது" என்றார்.

முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டியிடுவதால் தான் இந்த குழப்பம் நிலவுகிறதா என்ற கேள்விக்கு, "ஒரு குழப்பமும் இல்லை. எங்கள் உறுப்பினர்கள் ஒற்றுமையாக தான் உள்ளனர். அவர்களுக்கு ஒருவரையொருவர் நன்றாக தெரியும், புரிந்துகொள்வார்கள். அதனால், அந்த பிரச்னை எழாது" என்றார்.   

சத்தீஸ்கர் மாநிலத்திலும், முதல்வர் தேர்வு தொடர்பான இறுதி முடிவை ராகுல் காந்தி தான் எடுப்பார் என்று தெரிகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 68 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com