சபரிமலை விவகாரம்: கேரள தலைமைச் செயலகம் முன்பு ஐயப்ப பக்தர் தீக்குளிப்பு

கேரள தலைமைச் செயலகம் முன்பு ஐயப்ப பக்தர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சபரிமலை விவகாரம்: கேரள தலைமைச் செயலகம் முன்பு ஐயப்ப பக்தர் தீக்குளிப்பு

கேரள தலைமைச் செயலகம் முன்பு ஐயப்ப பக்தர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சபரிமலையில் நேரில் ஆய்வு மேற்கொண்ட உயர்நிலை குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அங்கு தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. 

இதனால், அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில், கோயிலில் பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்துள்ளனர். இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானம் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை விலக்க வலியுறுத்தியும், பக்தர்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரியும் எதிர்க்கட்சி கேரள சட்டப் பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அவை நடவடிக்கை முற்றிலும் முடங்கிள்ளது. 

இந்நிலையில் சபரிமலையில் 144 தடை உத்தரவை நீக்க வலியுறுத்தி கேரள மாநிலம் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு ஐயப்ப பக்தர் ஒருவர் தீக்குளித்துள்ளார். இதையடுத்து அந்த ஐயப்ப பக்தரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com