ஒரே நாளில் பதவியேற்கும் ராஜஸ்தான், ம.பி. முதல்வர்கள்: ராகுல் பங்கேற்பு

ராஜஸ்தான் முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மூன்றாவது முறையாக ராஜஸ்தான் முதல்வர் பதவியை ஏற்க இருக்கிறார். 
ஒரே நாளில் பதவியேற்கும் ராஜஸ்தான், ம.பி. முதல்வர்கள்: ராகுல் பங்கேற்பு

ராஜஸ்தான் முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மூன்றாவது முறையாக ராஜஸ்தான் முதல்வர் பதவியை ஏற்க இருக்கிறார். துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டார்.  காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் தில்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

சச்சின் பைலட் முதல்வராக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விரும்பினர். எனினும், பைலட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி ராகுல் சமரசம் செய்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் வரும் திங்கள்கிழமை (டிச. 17) பதவியேற்கவுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் 18-ஆவது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் (72)  வரும் 17-ஆம் தேதி பதவியேற்க உள்ளார். 4 சுயேச்சை எம்எல்ஏக்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், சமாஜவாதியின் எம்எல்ஏ ஆகியோருடன் சேர்த்து 121 உறுப்பினர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் சார்பாக 9 முறை மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்நாத், கடந்த ஏப்ரல் மாதம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், டிச.17ம் தேதி காலை 10 மணிக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு விழாவும், பிற்பகல் 1.30 மணிக்கு மத்தியப் பிரதேச மாநில முதல்வர் பதவியேற்பு விழாவும் நடைபெறுகிறது. இந்த இரு பதவியேற்பு விழாக்களிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கேற்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com