76 வயதில் பட்டப்படிப்புக்கான தேர்வெழுதிய முதியவர்.. அதுவும் இடது கையில்

கல்வி என்று வந்துவிட்டால் யாருக்குமே வயது ஒரு தடையில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த முதியவர்.
76 வயதில் பட்டப்படிப்புக்கான தேர்வெழுதிய முதியவர்.. அதுவும் இடது கையில்


விஜயபுரா: கல்வி என்று வந்துவிட்டால் யாருக்குமே வயது ஒரு தடையில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த முதியவர்.

76 வயதான அந்த முதியவர், இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தனது 4வது முதுநிலைப் பட்டப்படிப்புக்கான தேர்வை எழுதியுள்ளார்.

நிங்கய்யா வடேயார், இளஞ்சிவப்பு நிற மேலாடையுடன் தலையில் தலைப்பாகை அணிந்து கொண்டு தேர்வெழுத வந்திருந்தார். அவரைப் பார்த்து உடன் தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் மட்டுமல்ல, தேர்வறைக்கு வந்த கண்காணிப்பாளர் கூட சற்று ஆச்சரியம் அடைந்திருப்பார்.

கன்னட மொழியில் பள்ளிப் படிப்பை முடித்திருந்தாலும் தற்போது ஆங்கில வழியில்தான் தேர்வை எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல அவர் தனது இரண்டு கைகளாலும் தேர்வெழுதிம் திறன் பெற்றிருந்தார். ஆரம்பத்தில் எல்லோரையும் போல வலது கையில்தான் எழுதி வந்துள்ளார். வயோதிகம் காரணமாக கை வலுவிழந்து போனதால், தொடர் முயற்சியால் இடது கையிலும் எழுத பயிற்சி எடுத்துள்ளார்.

2000ஆவது ஆண்டில் பணி ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற்று வரும் வடேயர் தொடர்ந்து படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com