கோல்கேட், டெட்டாலை விட அதிகம் செலவிட்டிருக்கும் பாஜக: எல்லாம் அதற்குத்தான்!

நெட்ஃபிலிக்ஸ், கோல்கேட், டெட்டால் போன்ற வர்த்தகத் தயாரிப்புப் பொருட்களை விடவும், தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய பாஜக அதிகம் செலவிட்டுள்ளதாம்.
கோல்கேட், டெட்டாலை விட அதிகம் செலவிட்டிருக்கும் பாஜக: எல்லாம் அதற்குத்தான்!


நெட்ஃபிலிக்ஸ், கோல்கேட், டெட்டால் போன்ற வர்த்தகத் தயாரிப்புப் பொருட்களை விடவும், தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய பாஜக அதிகம் செலவிட்டுள்ளதாம்.

5 மாநில தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், பாஜக, தொலைக்காட்சி மூலமாக தனது கட்சியின் விளம்பரத்தை செய்ய ஏராளமான பணத்தை செலவிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதில்லாமல் நவம்பர் 16ம் தேதியுடன் முடிவடைந்த ஒரு வாரத்தில் மட்டும் மற்ற ஏனைய பொருட்களை விடவும், பாஜகவின் விளம்பரமே தொலைக்காட்சிகளில் அதிகம் ஒளிபரப்பான விளம்பரமாகவும் உள்ளது.

ஒரு வாரத்தில் தொலைக்காட்சிகளில் அதிகம் விளம்பரப்படுத்தப்பட்ட பொருட்களின் பட்டியலில் பாஜக முதலிடத்தில் உள்ளது. அதன்கீழ்தான், நெட்ஃபிலிக்ஸ், டெட்டால், கோல்கேட், அமேஸான் ஆகியவை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சி இந்த பட்டியலில் எங்குமே இடம்பெறவில்லை என்பதுதான்.

இவ்வளவையும் சொல்லியபின், பாஜக விளம்பரத்துக்காக மட்டும் செலவிட்ட தொகையை சொல்லவில்லை என்றால் நீங்கள் கோபித்துக் கொள்ள மாட்டீர்களா?

வாருங்கள் சொல்கிறோம்.. கடந்த 2014ம் ஆண்டு பாஜக மத்திய அரசில் பொறுப்பேற்ற பிறகு விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை ரூ.5,200 கோடி.  இதில் விமான நிலையம், பெட்ரோல் பங்க், திரையரங்கம், சாலைகள், அச்சு ஊடகம், தொலைக்காட்சி என பல வகைகளில் பாஜக பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லி வாக்குச் சேகரிக்க மத்திய அரசு செலவிட்டிருக்கும் தொகை ஒன்றல்ல, இரண்டல்ல ரூ.5,200 கோடி.

நீங்கள் எங்குச் சென்றாலும் அங்கு பிரதமர் மோடியின் புகைப்படத்தை பார்க்காமல் இருக்க முடியாத அளவுக்கு சுற்றி சுற்றி பாஜக வேலை செய்திருப்பதை நிச்சயம் தற்போது உங்களால் உணர முடியும் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது மோடியின் புகைப்படம் வந்தால் அது விளம்பரம் இல்லை. ஒருவேளை கனவாகக் கூட இருக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com