வங்கிகளைத் தனியார்மயமாக்குவதால் மட்டும் பிரச்னைகள் தீர்ந்துவிடாது: ரகுராம் ராஜன்

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதால் மட்டும், வங்கித்துறையில் நிலவி வரும் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க முடியாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
வங்கிகளைத் தனியார்மயமாக்குவதால் மட்டும் பிரச்னைகள் தீர்ந்துவிடாது: ரகுராம் ராஜன்

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதால் மட்டும், வங்கித்துறையில் நிலவி வரும் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க முடியாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தில்லியில் அவர் மேலும் கூறியதாவது:
வாராக்கடன் சுமையில் வங்கித்துறை சிக்கித்தவித்து வருவதால், பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகக்குழுக்களை பலப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. நிர்வாகக் குழுவின் நியமனத்தில் அரசியல் தலையீடு இல்லாதவாறு மத்திய அரசு நடந்துகொள்ள வேண்டும். 
ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்ற தனியார் வங்கிகளும் வாராக்கடனைத் தடுக்கப் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதன்மூலம், தனியார் வங்கிகளிலும் வாராக்கடன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நிலவி வருவது கண்கூடாகத் தெரிகிறது. எனவே, பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது போன்ற எளிய தீர்வுகளால் மட்டும் வங்கித்துறையில் நிலவும் அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்துவிட முடியாது.
வங்கிகளின் நிர்வாக முறைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது அவசியம். மேலும், வங்கிகளின் வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கப்பட வேண்டும். ரிசர்வ் வங்கி விதித்து வரும் வங்கி இருப்பு விகிதம் (எஸ்எல்ஆர்) குறைக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் வாராக்கடன் அளவைக் குறைக்கும் வகையில், வங்கிகள் கடன் வழங்க மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு இலக்குகளைக் குறைக்க வேண்டும். மேலும், வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்வதை மத்திய, மாநில அரசுகள் குறைத்துக்கொள்ள வேண்டும்.
பொதுத்துறை வங்கிகள் மீது மத்திய அரசு பல ஆண்டுகளாக விதித்து வரும் நிர்வாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com