உ.பி. கும்பமேளா ஏற்பாடுகள்: வெளிநாட்டுத் தூதர்கள் ஆய்வு

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெறவுள்ள கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை 70 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் சனிக்கிழமை பார்வையிட்டனர். பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கும்பமேளாவுக்கான முன்னேற்பாடுகளை சனிக்கிழமை பார்வையிட வந்த 70 நாடுகளின் தூதர்களை வரவேற்கும் விதமாக ஏற்றப்பட்ட அவர்கள் சார்ந்த நாடுகளின் தேசியக் கொடிகள்
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கும்பமேளாவுக்கான முன்னேற்பாடுகளை சனிக்கிழமை பார்வையிட வந்த 70 நாடுகளின் தூதர்களை வரவேற்கும் விதமாக ஏற்றப்பட்ட அவர்கள் சார்ந்த நாடுகளின் தேசியக் கொடிகள்

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெறவுள்ள கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை 70 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் சனிக்கிழமை பார்வையிட்டனர். பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா அடுத்த மாதம் 15-ஆம் தொடங்கவிருக்கிறது.
இதில் உலகெங்கிலும் இருந்து சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ளும் நிலையில், தில்லியில் உள்ள 70 நாடுகளின் தூதர்கள் திங்கள்கிழமை சிறப்பு விமானம் மூலமாக பிரயாக்ராஜ் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டதாக, இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த கும்பமேளா பண்டிகைக்கு "மனிதகுலத்தில் இன்றியமையாத கலாசார பாரம்பரிய விழா' என்று யுனெஸ்கோ அமைப்பு அங்கீகாரம் அளித்தது. 
உலகில் மத ரீதியாக நடத்தப்படும் மாபெரும் விழாக்களில் ஒன்றாக கும்பமேளா கருதப்படுகிறது. 
நாசிக், பிரயாக்ராஜ், உஜ்ஜைனி, ஹரித்வார் ஆகிய நகரங்களில் சுழற்சி முறையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடத்தப்படுகிறது. அதில் பிரயாக்ராஜில் மூன்று நதிகள் சங்கமிக்கும் "சங்கம்' பகுதியில் நடத்தப்படும் கும்பமேளா, மற்ற இடங்களைக் காட்டிலும் சிறப்புமிக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com