எதிரி நாடுகளின் கைப்பாவையாக செயல்படுகிறது காங்கிரஸ்: பாஜக

பாகிஸ்தான், சீனா போன்ற எதிரி நாடுகளின் கைப்பாவையாக காங்கிரஸ் கட்சி செயல்படுவதோடு, ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய நெருக்கடி கொடுத்து வருகிறது என்று ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா

பாகிஸ்தான், சீனா போன்ற எதிரி நாடுகளின் கைப்பாவையாக காங்கிரஸ் கட்சி செயல்படுவதோடு, ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய நெருக்கடி கொடுத்து வருகிறது என்று ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மாநிலத்தின் ரியாஸி மாவட்டத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்; விமானப் படையை வலிமை மிகுந்ததாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் ரஃபேல் ஒப்பந்தத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்துச் சென்றார். ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், அக்கட்சியின் மூத்த தலைவர்களும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
தேசத்தின் பாதுகாப்பு சார்ந்த விஷயத்தோடு காங்கிரஸ் கட்சி விளையாடி வருகிறது. பாகிஸ்தான், சீனா போன்ற எதிரி நாடுகள், பாதுகாப்பு தளவாடங்களையும், ஆயுதங்களையும் கொள்முதல் செய்வதன் மூலமாக அவர்களைப் பலப்படுத்தி வருகின்றனர். ஆனால், எல்லையில் அத்துமீறும் அண்டை நாடுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் நோக்கில் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் அரசுடன் பிரதமர் மோடி ஒப்பந்தம் செய்யும்போது காங்கிரஸ் கட்சி அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. 
இந்தியா பலமடைந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில், ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர்களும் எதிரி நாடுகளுடன் சேர்ந்து சதி செய்து வருகின்றனர். பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் நலனுக்காகத்தான் காங்கிரஸ் கட்சி கூக்குரல் எழுப்புகிறது. இந்நாட்டின் எதிரிகள் இசைக்கும் மெட்டுக்கு ஏற்ப அவர்கள் நடனமாடுகின்றனர் 
என்றார்.
ஜம்மு-காஷ்மீரில், மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் பாஜக வெற்றி பெறும் என்றும், மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கும் என்றும் அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com