ரஃபேல் முறைகேடு: ஜேபிசி விசாரணையே தீர்வு

ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதா, இல்லையா என்பதை, நாடாளுமன்றக் கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை நடத்தினால் மட்டுமே கண்டறிய முடியும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில்
ரஃபேல் முறைகேடு: ஜேபிசி விசாரணையே தீர்வு

ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதா, இல்லையா என்பதை, நாடாளுமன்றக் கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை நடத்தினால் மட்டுமே கண்டறிய முடியும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அக்கட்சி இவ்வாறு கூறியுள்ளது.
ரஃபேல் போர் விமானங்களின் விலை, தொழில்நுட்ப அம்சம் உள்ளிட்டவற்றை நீதிமன்றம் ஆராயவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
முன்னதாக, ரஃபேல் ஒப்பந்தம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தபோது, மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், ரஃபேல் போர் விமான விலையை நாடாளுமன்றத்தில் அரசு தெரிவிக்க இயலாது என்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டது. ஆனால், விலை விவரங்களை தலைமை கணக்கு தணிக்கையாளரிடம் அரசு கூறியிருப்பதாகவும், நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு, தணிக்கை அறிக்கையை ஆய்வு செய்திருப்பதாகவும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற வழக்குரைஞரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல், புது தில்லியில் சனிக்கிழமை கூறியதாவது:
ரஃபேல் ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கையை தாம் ஒருபோதும் பெறவில்லை என்று நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார்.
இதற்கு யார் பொறுப்பேற்பது? அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக கூறியவர்கள் யார்? அரசுதான் அதைச் சொன்னது. இதுதொடர்பான பிரமாணப் பத்திரத்தை அட்டர்னி ஜெனரல் தாக்கல் செய்தது எப்படி?
இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாகும். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டாக வேண்டும். ஏனெனில், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து சாதகமான அறிக்கையை சிஏஜி வழங்கியதாகவும், அதை நாடாளுமன்றம் ஆய்வு செய்துவிட்டதாகவும் மக்களுக்கு செய்தி பரவியிருக்கிறது. அது தவறானது.
நிலைமை இப்படி இருக்கையில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நற்சான்று வழங்கியிருப்பதாக எப்படி கூற முடியும்? அரசு ஆதராங்களை கொடுக்காத நிலையில், அதுகுறித்து குறுக்கு விசாரணை நடத்தப்படாத நிலையில் நற்சான்று வழங்கியது யார்? உடனடியாகவோ அல்லது சிறிது காலம் கழித்தோ, இந்த விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் மட்டுமே நியாயமாக 
விசாரிக்க முடியும் என்றார் சிபல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com