ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் அதிக அளவில் பெண்களுக்கு வாய்ப்பு

இந்திய ராணுவத்தில் மொழி பெயர்ப்பாளர்கள், இணையவழி தொழில்நுட்ப நிபுணர்கள் போன்ற போரில்லாத பணிகளில் அதிக அளவில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத்
ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் அதிக அளவில் பெண்களுக்கு வாய்ப்பு

இந்திய ராணுவத்தில் மொழி பெயர்ப்பாளர்கள், இணையவழி தொழில்நுட்ப நிபுணர்கள் போன்ற போரில்லாத பணிகளில் அதிக அளவில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் கூறியுள்ளார்.
ஹைதராபாதின் துண்டிகல் பகுதியில் உள்ள விமானப் படை அகாதெமியில் பயிற்சி முடித்தவர்களைக் கெளரவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விபின் ராவத், விமானப் படை பயிற்சி முடித்த இளைஞர்களைப் பாராட்டினார். பயிற்சியை நிறைவு செய்தவர்களில் 24 பேர் பெண்கள். அவர்களைப் பாராட்டியபோது, பெண்களுக்கு அதிகாரம் வழங்கி வரும் நமது தேசத்தில், பயிற்சி முடித்துள்ள பெண்களாகிய நீங்கள், மற்றவர்களுக்கு ஊக்கசக்தியாக இருப்பீர்கள் என்று வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, ராணுவத்தில் பெண்களை சேர்ப்பது அதிகரிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
ராணுவத்தில் மொழி பெயர்ப்பாளர்கள், இணைய வழி தொழில்நுட்ப நிபுணர்கள், போர்த் தளவாடம் பற்றிய விவரங்களைத் தெரிந்து வைத்திருப்பவர்கள் தேவைப்படுகிறார்கள். அந்தப் பணிகளுக்கு பெண்கள் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் பெண்களின் பங்களிப்பை படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ராணுவத்தில் அதிகாரிகள் பதவி வரை பெண்களின் நிலையை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.  இதுதவிர, ராணுவத்தினருக்கான காவல் துறையில் பெண்களைச் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com