பட்ஜெட்டில் ஏமாற்றம்: தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை! 

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  2018-19 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
பட்ஜெட்டில் ஏமாற்றம்: தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை! 

புதுதில்லி: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  2018-19 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   

2018-19 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் வாசிக்கத் தொடங்கியுள்ளார்.  அதில் வருமான வரி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் பின் வருமாறு:

தனி நபர் வருமான வரி ஆண்டு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இன்றி ரூ.2.5 லட்சமாகத் தொடரும்.

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் அளிக்கப்பட உள்ளது.

அதே சமயம் வருமான வரியில் ஏமாற்றம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

பெரு நிறுவனங்களுக்கான  'கார்ப்பரேட் வரி' குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை வருமானம் உள்ள நிறுவனங்களுக்கான வரி தற்பொழுது உள்ள 30%  - லிருந்து  25% ஆக குறைக்கப்படுகிறது.   

தனிநபர் வருமான வரி வருவாய் உயர்ந்துள்ளது.

மாத ஊதியம் பெறுபவர்களுக்கான நிரந்தர வரிக் கழிவு ரூ.40 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் சுகாதாரம் மற்றும் போக்குவரத்து செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

மூத்த குடிமக்களுக்கு அஞ்சலக மற்றும் வங்கி சேமிப்பு. வைப்புத் தொகைகள் ஆகியவற்றில் இருந்து வரும் வட்டி வருவாயில் முன்பு ரூ.10 ஆயிரம் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அது தற்பொழுது ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.   

50 வயது வரை உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் 80 வயது வரையுள்ள மிக மூத்த  குடிமக்கள் ஆகியோர் மருத்துவக் காப்பீட்டுக்குச் செலுத்தும் பிரீமியம் தொகைக்கு 80G பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com