மதுவுக்கு 200 சதவீத வரி: கேரள அரசு அறிவிப்பு

மதுவகைகளுக்கு 200 சதவீதம் வரி விதித்து கேரள அரசு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவித்துள்ளது.
மதுவுக்கு 200 சதவீத வரி: கேரள அரசு அறிவிப்பு

கேரளா சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் பலதரப்பட்ட மது வகைகளுக்கு 200 சதவீதம் வரை வரி விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐஸக் தெரிவித்ததாவது:

பலதரப்பட்ட மது வகைகளுக்கான புதிய வரி விகிதங்கள் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி ரூ.400-க்கு மேல் விற்பனையாகும் மதுவகைகளுக்கு 210 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ரூ.400-க்கும் குறைவாக விற்கப்படும் மதுபானங்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. பீர் வகைகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படுகிறது. 

இறக்குமதி செய்யப்பட்ட அந்நிய தயாரிப்பு மது வகைகளுக்கு 78 சதவீதமும், வயின் வகைகளுக்கு 28 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. இதனால் ரூ.60 கோடி வரை வருவாய் அதிகரிப்பு ஏற்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com