நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது: தம்பிதுரை எம்.பி பேட்டி!

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு கிடையாது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருடனான சந்திப்புக்குப் பின் அதிமுக எம்.பி., தம்பிதுரை தெரிவித்துள்ளார். 
நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது: தம்பிதுரை எம்.பி பேட்டி!

புதுதில்லி: நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு கிடையாது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருடனான சந்திப்புக்குப் பின் அதிமுக எம்.பி., தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பட்டாசுத் தடை மற்றும் பட்டாசுத் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளோடு மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பியுமான தம்பிதுரை மற்றும் தமிழக அமைச்சர்கள் பெஞ்சமின், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் , மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்தனர்.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை கூறியதாவது:-

பண்டிகை காலங்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு உற்பத்திக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கப்படாது என மத்திய அமைச்சர் எங்களிடம் உறுதி அளித்துள்ளார்.

அத்துடன் பட்டாசு தொழிற்சாலைகள் பாதிக்கப்படாமல் இருக்க சுற்றுச்சூழல் விதியில் திருத்தம் கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com