எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் இடம் பார்க்கவில்லையா? : தமிழக அரசுக்கு மத்திய அரசு குட்டு! 

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் இடம் பார்க்கவில்லையா? : தமிழக அரசுக்கு மத்திய அரசு குட்டு! 

புதுதில்லி: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015-ல் தமிழகம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இவற்றில் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் மருத்துவனை அமைப்பதற்கான இடம் தேர்வு, கட்டுமானம் உள்ளிட்ட முதல் கட்ட பணிகள் எப்பொழுதோ துவங்கிவிட்டன.

அதேபோல் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சை, மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஐந்து இடங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்தது. அதன் தொடர்ச்சியாக 2015 ஏப்ரலில் மத்திய குழு ஒன்று தமிழகம் வந்து ஆய்வு நடத்தியது. ஆனால் அதன் பின்பும் மருத்துவமனை அமையப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் மருத்துவமனை அமையும் இடத்தை விரைவில் அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படியும் எந்த விதமான பதிலும் இல்லாத காரணத்தால் நீதிமன்ற உத்தரவு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி உயர்ந நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் நகல் ஒன்று உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்த ரமேசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com