மக்களே உஷார்! ஆர்பிஐ பெயரில் போலி இணையதளம்: எச்சரிக்கிறது ரிசர்வ் வங்கி

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் போலியாக இணையதளம் ஒன்று செயல்படுவதாக பொதுமக்களுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்களே உஷார்! ஆர்பிஐ பெயரில் போலி இணையதளம்: எச்சரிக்கிறது ரிசர்வ் வங்கி


மும்பை: ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் போலியாக இணையதளம் ஒன்று செயல்படுவதாக பொதுமக்களுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது, www.indiareserveban.org என்ற முகவரியில் இயங்கி வரும் இந்த இணையதளம், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் இணையதளம் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், 'ஆன்லைன் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க' என்ற லிங்க கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி மோசடியில் ஈடுபடும் வகையில் இந்த இணையதளம் செயல்பட்டு வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இது குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனி நபர்களின் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களை திரட்டி அதன் மூலம் மோசடி செய்யும் கும்பலால் இந்த இணையதளம் செயல்பட்டு வருவதாகவும், எந்த காரணத்துக்காகவும், தனி நபர்களின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை ஆர்பிஐ எப்போதும் கேட்காது என்பதை தெளிவுபடுத்துவதாகவும் கூறியுள்ளது.
 

ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம்
ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம்
போலி இணையதளம்
போலி இணையதளம்

இதே போல, www.rbi.org, www.rbi.in போன்ற இணையதளங்களும் ஆர்பிஐ-யின் இணையதளங்களைப் போலவே உருவாக்கப்பட்டு மோசடி நபர்களால் செயல்படுவதாகவும், இது குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்றும் ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முகவரி www.rbi.org.in என்பதே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com