கிரண் ரிஜிஜுக்கு எதிராக ரேணுகா சௌத்ரி உரிமை மீறல் நோட்டீஸ்

தன்னை விமர்சித்து பிரதமர் மோடி பேசிய விடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுக்கு எதிராக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌத்ரி உரிமை
கிரண் ரிஜிஜுக்கு எதிராக ரேணுகா சௌத்ரி உரிமை மீறல் நோட்டீஸ்

தன்னை விமர்சித்து பிரதமர் மோடி பேசிய விடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுக்கு எதிராக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌத்ரி உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரக் கோரி நோட்டீஸ் அளித்தார்.
குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது, திடீரென அவையில் அமர்ந்திருந்த ரேணுகா சௌத்ரி வெடிச் சிரிப்பை வெளிப்படுத்தினார். இதையடுத்து, அவரது செயலை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கண்டித்தார். அப்போது, அவரைத் தடுக்க வேண்டாம். ராமாயணத் தொடருக்குப் பிறகு இப்போதுதான் இப்படி ஒரு சிரிப்பை கேட்க முடிந்தது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இந்நிலையில், அவர் பேசும் விடியோவை கிரண் ரிஜிஜு, சுட்டுரையில் பதிவேற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரேணுகா சௌத்ரியும், காங்கிரஸ் பெண் எம்.பி.க்களும் வெங்கய்ய நாயுடுவைச் சந்தித்து கிரண் ரிஜிஜுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று வலியுறுத்தினர்.
விதிமுறைப்படி, உரிமை மீறல் தீர்மானத்தின் முக்கியத்துவத்தை ஆய்வு செய்து, ரிஜிஜுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அந்தத் தீர்மானத்தை வெங்கய்ய நாயுடு மக்களவைக்கு அனுப்பி வைக்க வேண்டும். ரிஜிஜு மக்களவை உறுப்பினர் ஆவார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com