ஒடிஸா இடைத்தேர்தலில் பிஜேடி வெற்றி பெறும் 

ஒடிஸாவின் பிஜேப்பூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) வெற்றி பெறும் என்று அக்கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒடிஸா இடைத்தேர்தலில் பிஜேடி வெற்றி பெறும் 

ஒடிஸாவின் பிஜேப்பூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) வெற்றி பெறும் என்று அக்கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிஜேப்பூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு வரும் 24ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக முதல்வர் நவீன் பட்நாயக், புவனேசுவரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறுகையில் 'பிஜேப்பூர் இடைத்தேர்தலில் எங்கள் கட்சி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். எங்கள் வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகள்தான் இந்த நம்பிக்கைக்கு அடிப்படை' என்று தெரிவித்தார்.
அதன் பின் அவர் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற உள்ள ஹாக்கி உலகக் கோப்பை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை ஒடிஸா அரசு புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா மைதானத்தில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரை நடத்துகிறது. இதனிடையே, பிஜேப்பூர் தொகுதி இடைத்தேர்தலுக்காக முதல்வர் நவீன் பட்நாயக் வரும் 19 மற்றும் 21ஆம் தேதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்வார் என்று பிஜு ஜனதா தள வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை, இத்தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதானும், சந்தோஷ்குமார் கங்க்வாரும் பிரசாரம் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com