காங்கிரஸ் தொண்டர்களுடன் ராகுல் கலந்துரையாடல்

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தொண்டர்களை புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸ் தொண்டர்களுடன் ராகுல் கலந்துரையாடல்

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தொண்டர்களை புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த காலங்களில், ஜனதா தர்பார் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் கட்சித் தொண்டர்களைச் சந்திப்பதை இந்திரா காந்தி போன்ற தலைவர்கள் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். அந்த வரிசையில், தொண்டர்கள் எளிதில் அணுகக் கூடிய தலைவராக தன்னை வடிவமைத்துக் கொள்வதற்கு ராகுல் காந்தி முயன்று வருகிறார்.
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 
தில்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு ராகுல் காந்தி புதன்கிழமை காலை 10 மணியளவில் வந்தார். அவர், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், பிகார், மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கலந்துரையாடினார். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது.
கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள புல்வெளியில் நீண்ட நேரம் உலவிக் கொண்டிருந்த அவர், புதுக்கப்பட்டுள்ள தனது அலுவலகத்தில் கட்சியின் மூத்த தலைவர்களை பின்னர் சந்தித்துப் பேசினார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் தலைமையகத்தில் உள்ள கட்சித் தலைவர் அலுவலகம் கடந்த சில ஆண்டுகளாகப் பூட்டிக் கிடந்தது. அங்கு நடைபெறும் உயர் நிலைக் கூட்டங்களுக்கு கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வரும்போது மட்டும் அந்த அலுவலகம் திறக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், அது நீண்ட நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை திறக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com