கிருஷ்ணராஜ சாகர் அணை பகுதியில் பலத்த பாதுகாப்பு தமிழக வாகனங்கள் தீவிர கண்காணிப்பு

காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் உள்ளதாக கர்நாடகம் தெரிவித்துள்ள நிலையில், நீர் இருப்பு குறித்த உண்மைத் தன்மையை கண்டறிய தமிழக அதிகாரிகள் அல்லது நிபுணத்துவம் பெற்றவர்கள்,

காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் உள்ளதாக கர்நாடகம் தெரிவித்துள்ள நிலையில், நீர் இருப்பு குறித்த உண்மைத் தன்மையை கண்டறிய தமிழக அதிகாரிகள் அல்லது நிபுணத்துவம் பெற்றவர்கள், விவசாயிகள் கிருஷ்ணராஜ சாகர் அணைக்குச் சென்று ஆய்வு செய்யக் கூடும் என்ற தகவலின் பேரில், அணை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
மேலும், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை தீவிர சோதனைக்குப் பிறகு அவ் வழியாக அனுமதிக்கப்படுகிறது. அண்மையில் தமிழக முதல்வர் பழனிசாமி, காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், அதில் இந்த விவகாரம் குறித்து பேச்சு நடத்த நேரம் ஒதுக்குமாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், கே.ஆர்.எஸ். அணைக்குச் சென்று, தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தப் போவதாக தமிழ்நாடு விவசாயி சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 16 வாகனங்களில் 150 விவசாயிகள் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டு தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், சேலம், ஓசூர் வழியாக வந்தனர். 
அவர்களை தமிழக எல்லை ஜுஜுவாடி அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, மண்டியா மாவட்டம் கே.ஆர்.எஸ் அணைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. 
அண்மையில் மகதாயி நதிநீர்ப் பங்கீடு விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கர்நாடக அரசின் அனுமதியைப் பெறாமலே கோவா அமைச்சர்கள் வட கர்நாடகத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பிறகு நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக நீதிமன்றத்துக்கு தவறான தகவலை கர்நாடகம் தெரிவித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ் அணையை தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் வந்து ஆய்வு செய்யக் கூடும் என்பதால், கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு பலத்த பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com