'தகுந்த வேலைவாய்ப்பு இல்லாதது மிகப்பெரிய சவால்'

நாட்டில் வேலையின்மை பிரச்னையைவிட, விருப்பமற்ற வேலை, தகுதிக்கும் குறைவான வேலை ஆகியவை மிகப்பெரிய சவால்களாக உள்ளன என்று மத்திய கொள்கைக் குழுவின் (நீதி ஆயோக்) துணைத் தலைவர்
'தகுந்த வேலைவாய்ப்பு இல்லாதது மிகப்பெரிய சவால்'

நாட்டில் வேலையின்மை பிரச்னையைவிட, விருப்பமற்ற வேலை, தகுதிக்கும் குறைவான வேலை ஆகியவை மிகப்பெரிய சவால்களாக உள்ளன என்று மத்திய கொள்கைக் குழுவின் (நீதி ஆயோக்) துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறினார்.
தில்லியில் பட்ஜெட்டுக்கு பிந்தைய ஆலோசனைக் கூட்டம், இந்திய தொழிலகக் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராஜீவ் குமார் பேசியதாவது:
பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த தொழில் வளர்ச்சிக்காக, தானியங்கி இயந்திரங்கள், ரோபோ இயந்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டியுள்ளது. மறுபுறம், இளைய தலைமுறையினருக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது.
இதைச் சமன்படுத்த புத்திசாலித்தனமான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியது அவசியம். இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு வெளிநாடுகளின் வேலைவாய்ப்புக் கொள்கைகளை நம் நாட்டில் பயன்படுத்தினால், அவை வெற்றிபெறாமல் போகும்.
இன்றைய இளைய தலைமுறையினர், தங்கள் தகுதிக்கு குறைவான பணியைப் பார்ப்பதாகக் கருதுகிறார்கள். அவர்கள் யதார்த்தத்தை மீறி ஆசைப்படுகிறார்கள். வேலையின்மை பிரச்னையைவிட, திருப்தியற்ற வேலை, தகுதிக்கு குறைவான வேலை ஆகியவை மிகப்பெரிய சவால்களாக உள்ளன. எனவே, இளைஞர்களை பணியில் சேர்வதற்குத் தகுதியானவர்களாக உருவாக்குவதற்கு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முறையில் அரசு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com