'பிரிட்டனை விஞ்சியது இந்தியாவின் பாதுகாப்புத் துறை பட்ஜெட்'

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் தங்களின் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், பிரிட்டனை இந்தியா விஞ்சியிருப்பது தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் தங்களின் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், பிரிட்டனை இந்தியா விஞ்சியிருப்பது தெரியவந்துள்ளது.
அத்துடன், பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
உக்திகள் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான சர்வதேச நிறுவனம் (ஐஐஎஸ்எஸ்) மேற்கொண்ட ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. பொது பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்த நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்து சீனாவும், சவூதி அரேபியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. நான்காவது இடத்தில் ரஷியாவும், ஐந்தாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.
கடந்த 2016-ஆம் ஆண்டில், 51.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.3.2 லட்சம் கோடி) இந்தியா ஒதுக்கியது. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 52.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.
பாதுகாப்புத் துறைக்கு கடந்த 2016-ஆம் ஆண்டில் 52.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கிய பிரிட்டன், கடந்த ஆண்டில் 50.7 பில்லியன் டாலர்களை மட்டுமே ஒதுக்கியது. இதன்மூலம், இந்த விஷயத்தில் அந்நாட்டை இந்தியா விஞ்சியுள்ளது. அமெரிக்கா 150.5 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com