6 கட்சிகளுக்கு எதிரான புகார்: விசாரணையை ஒத்தி வைத்தது சிஐசி

தலைமைத் தகவல் ஆணையத்தின் உத்தரவை மீறியதாக 6 கட்சிகளுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் தொடர்பான விசாரணையை அந்த ஆணையத்தின் தலைமை ஆணையம் (சிஐசி) ஒத்திவைத்தது.

தலைமைத் தகவல் ஆணையத்தின் உத்தரவை மீறியதாக 6 கட்சிகளுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் தொடர்பான விசாரணையை அந்த ஆணையத்தின் தலைமை ஆணையம் (சிஐசி) ஒத்திவைத்தது.
இந்த புகார் மீதான விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கடந்த 2014-ஆம் ஆண்டில் தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இதுவரை அந்தப் புகார் மீதான விசாரணை முன்னெடுக்கப்படவில்லை.
இந்நிலையில், அதன் மீதான விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.20) நடைபெறவிருந்தது. ஆனால், சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக விசாரணையை ஒத்திவைப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஆர்.கே. மாத்தூர் வெளியிட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட அமர்வில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆசார்யலு குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த விவகாரத்தை ஆசார்யலு உள்பட 3 பேர் கொண்ட அமர்வு கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் விசாரித்தது. அப்போது, தகவல் ஆணையர்களில் ஒருவரான விமல் ஜுல்கா, சில காரணங்களைக் கூறி அந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். 
அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை தாற்காலிகமாக ஆர்.கே.மாத்தூர் நிறுத்தி வைத்தார். பின்னர், இந்த விவகாரத்தை விசாரிப்பதற்கு 4 பேர் கொண்ட வேறொரு குழுவை அவர் அமைத்தார். 
பாஜக, தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் ஆகிய 6 கட்சிகள் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி தகவல் அறியும் சட்டத்தின் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com