இந்தியாவில் அழியும் நிலையில் 40 மொழிகள்: மத்திய அரசு

இந்தியாவில் அழியும் நிலையில் 40க்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அழியும் நிலையில் 40 மொழிகள்: மத்திய அரசு

இந்தியாவில் அழியும் நிலையில் 40க்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் அளித்திருக்கும் அறிக்கையின்படி, 22 அட்டவணை மொழிகளும், 100க்கும் மேற்பட்ட அட்டவணை இல்லாத மொழிகளும் இந்தியாவில் அதிக அளவிலான மக்களால் பேசப்பட்டு வருகின்றன. அதாவது, ஒரு லட்சம் அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையிலான மக்களால் அந்த மொழிகள் பேசப்படுகின்றன.
இதுதவிர, பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளால் 31 மொழிகள் ஆட்சி மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களால் பேசப்பட்டு வரும் 42 மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. அதாவது இந்த மொழிகளை 10 ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் பேசி வருகின்றனர். எனவே, இந்த மொழிகள் அனைத்தும் அழியக்கூடிய நிலையில் இருக்கும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தியாவில் அழியும் நிலையில் இருக்கும் மொழிகளாக, யுனெஸ்கோ அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ள பட்டியலிலும் இந்த 42 மொழிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த 42 மொழிகளில், அந்தமான்-நிகோபார் தீவுகளில் பேசப்படும் 11 மொழிகளும் அடங்கும். இதுதவிர்த்து, மணிப்பூரில் பேசப்படும் 7 மொழிகள், ஹிமாசலப் பிரசேத்தில் பேசப்படும் 4 மொழிகள், ஒடிஸாவில் பேசப்படும் 3 மொழிகள், கர்நாடகத்தில் பேசப்படும் குருபா மொழி, ஆந்திரத்தில் பேசப்படும் கடபா, நாய்கி ஆகிய மொழிகள், தமிழகத்தில் பேசப்படும் கோடா, தோடர் மொழிகள் ஆகியவையும் அழியும் நிலையில் இருக்கும் மொழிகள் ஆகும்.
அருணாசலப் பிரதேசத்தில் 2 மொழிகள், அஸ்ஸாமில் 2 மொழிகள், உத்தரகண்ட், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், மேகாலயம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. இதையடுத்து, இந்த 42 மொழிகளையும் அழியாமல் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளில் இந்திய மொழிகளுக்கான மத்திய கல்வி நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com