குஜராத் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: சாதித்த பாரதிய ஜனதா! 

திங்களன்று வெளியான குஜராத் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 93 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
 குஜராத் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: சாதித்த பாரதிய ஜனதா! 

அகமதாபாத்: திங்களன்று வெளியான குஜராத் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 93 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

குஜராத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த சனிக்கிழமையன்று தேர்தல் நடந்தது. 74 நகராட்சிகள், இரண்டு மாவட்ட பஞ்சாயத்துகள், 17 தாலுகா பஞ்சாயத்து உள்ளிட்ட 93 உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள்  திங்களன்று எண்ணப்பட்டடன.

வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 16 இடங்களில் காங்கிரஸ் வென்றது. நான்கு இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். அதே நேரம் ஆறு இடங்களில் எந்த வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக 59 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது பாஜக கடந்த முறையினை விட குறைவாக இடங்களைத்தான் வென்றுள்ளது. அதேசமயம் ஆளும் பாஜகவை விடவும், காங்கிரஸ் கூடுதலான இடங்களில் வெற்றி  பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலிலும் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக ஆட்சியைக் கைப்பற்றினாலும் முந்தைய தேர்தலை விடவும் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தினை  காங்கிரஸ் கைப்பற்றியது கவனிக்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com