சாக்கடைகளை சுத்தம் செய்ய வந்தாச்சு ரோபோ: கேரளாவில் விரைவில் அறிமுகம்! 

கேரளாவில் சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியில் விரைவில் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
சாக்கடைகளை சுத்தம் செய்ய வந்தாச்சு ரோபோ: கேரளாவில் விரைவில் அறிமுகம்! 

திருவனந்தபுரம்: கேரளாவில் சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியில் விரைவில் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

கழிவுநீர் குழாய்களில் ஏற்படும் கசிவு மற்றும் கழிவுகளை மனிதர்கள் துப்புரவு செய்வதை மாற்றியமைக்க கேரளா அரசு திட்டமிட்டது. இதற்காக கேரள நீர் வாரியமானது, கேரள ஸ்டார்ட் அப் மிஷன் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது.

இதற்காக ஜென்ரோபோடிக்ஸ் வகை ரோபோக்கள் தனிப்பட்ட வகையில் உருவாக்கப்பட்டன. அதற்காக சோதனைகளும் நடத்தப்பட்டன. இதுபற்றி ஜென்ரோபோடிக்ஸ் வடிவமைப்பாளர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனர் விஷ்ணு கோவிந்த் கூறியதாவது:

திருவனந்தபுரத்தில் 5000க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய உள்ள இந்த ரோபோ, 7-8 மாதங்களில் வடிவமைக்கப்பட்டது.சமீபத்தில் பல்வேறு பொறியியல் துறையைச் சேர்ந்த ஒன்பது இளைஞர்கள் உதவியுடன், ரோபோவுக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது.

அப்பொழுது திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியின் அருகே 30 கிலோ குப்பைகளை ரோபோ அகற்றியது. அத்துடன் துணிகள், பிளெடுகள் முதலிய பொருட்களை தனித்தனியாக பிரித்து எடுத்தது வியப்பாக இருந்தது. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் விரைவில் மனிதர்கள் கழிவுகளை சுத்தம் செய்யும் நிலை மாறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கேரளா அரசின் இந்த முன்னோடித் திட்டம் குறித்து, கேரள நீர் வாரிய நிர்வாக இயக்குனர் ஷைனமோல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இத்திட்டத்தினால் கேரள அரசாங்கம் மிகவும் உற்சாகமாக உள்ளது. நகரின் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் பொருட்டு ஜென்ரோபோடிக்ஸ் வகையிலான ரோபோக்களின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் முதல் ரோபோக்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த ரோபோக்களில் வை-பை, ப்ளூடூத் முதலிய வசதிகள் அடங்கிய கட்டுப்பாட்டு கருவியானது, அதன் நான்கு மூட்டுகளிலும் இணைக்கப்பட்டிருக்கும். அத்துடன் கழிவுநீர் அகற்ற வாளி போன்ற அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு அரசாங்கம் முழுமையான நிதி அளிக்க தயாராகவுள்ளதால் அடுத்த வாரம் முழுமூச்சில்  ரோபோக்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்படும். இந்த ரோபோக்களுக்கு ‘பண்டிகூட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com