பிஎன்பி வங்கி மோசடி குறித்து முழு விசாரணை: மம்தா வலியுறுத்தல்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) சுமார் ரூ.11,000 கோடி மோசடி செய்யப்பட்ட விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான
பிஎன்பி வங்கி மோசடி குறித்து முழு விசாரணை: மம்தா வலியுறுத்தல்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) சுமார் ரூ.11,000 கோடி மோசடி செய்யப்பட்ட விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நாட்டில் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட காலத்தில், மிகப்பெரிய அளவில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான வங்கிகளுக்கு தொடர்புள்ளது. இதில் முழு உண்மையும் வெளிக் கொணர வேண்டும்.
உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட காலத்தில், முக்கிய வங்கிகளில் பணியாற்றிய அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். வேறு சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களை பணியிட மாற்றம், பணிநீக்கம் செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அந்தப் பதிவுகளில் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி சுமார் ரூ.11,000 கோடி மோசடி செய்தது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி, சிபிஐ அமைப்பிடம் புகார் அளித்துள்ளது. இதையடுத்து, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com