"ஹைபர்லூப்' போக்குவரத்து: மகராஷ்டிர அரசுடன் விர்ஜின் குழுமம் ஒப்பந்தம்

மும்பை- புணே இடையே "ஹைபர்லூப்' தொழில்நுட்பத்தில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த மகாராஷ்டிர மாநில அரசுடன் விர்ஜின் குழுமம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
"ஹைபர்லூப்' போக்குவரத்து: மகராஷ்டிர அரசுடன் விர்ஜின் குழுமம் ஒப்பந்தம்

மும்பை- புணே இடையே "ஹைபர்லூப்' தொழில்நுட்பத்தில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த மகாராஷ்டிர மாநில அரசுடன் விர்ஜின் குழுமம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஹைபர்லூப் தொழில்நுட்பத்தில் இரு ஊர்களை இணைக்கும் வகையில் பிரமாண்டமான குழாய் பாதை அமைக்கப்படும். அதற்கு நடுவே ஹைபர்லூப் வாகனம் மணிக்கு சுமார் 1000 கி.மீ. வேகத்தில் அதிவிரைவாகச் செல்லும். இப்போது மும்பை-புணே இடையே பயண நேரம் மூன்று மணி நேரமாக உள்ளது. ஹைபர்லூப் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வந்தால், பயண நேரம் வெறும் 20 நிமிடமாகக் குறையும். இந்த ஹைபர்லூப் வாகனம் முழுவதும் மின்னணு முறையில் இயங்கக் கூடியதாகும்.
எனினும் இத்திட்டம் எத்தனை ஆண்டுகளில் முடிக்கப்படும். இதற்கான செலவு எவ்வளவு என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இத்திட்டம் அமலுக்கு வரும்போது ஆண்டுக்கு 15 கோடி பேர் இதில் பயணிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச விமான நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல்லை நாட்டினார். விர்ஜின் குழுமத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் இந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, "மும்பை-புணே இடையே ஹைபர்லூப் போக்குவரத்தை தொடங்க மகாராஷ்டிர அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்' என்றார்.
ஏற்கெனவே, ஆந்திர தலைநகர் அமராவதி - விஜயவாடா இடையே ஹைபர்லூப் அமைக்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் ஹைபர்லூப் திட்டம் என்பது குறிப்பிட்டத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com