விவசாயிகளின் வருவாயை 2022-க்குள் இரட்டிப்பாக்க உறுதிபூண்டுள்ளோம்: மிருதுளா சின்ஹா

கோவா சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்க நாளில் உரையாற்றிய அம்மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா, விவசாயிகளின் வருவாயை வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக்க மாநில அரசு
விவசாயிகளின் வருவாயை 2022-க்குள் இரட்டிப்பாக்க உறுதிபூண்டுள்ளோம்: மிருதுளா சின்ஹா

கோவா சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்க நாளில் உரையாற்றிய அம்மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா, விவசாயிகளின் வருவாயை வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்தார்.
கோவா சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. மரபின்படி முதல் நாளன்று உரையாற்ற வந்த ஆளுநர் மிருதுளா சின்ஹாவை பேரவைத் தலைவர் பிரமோத் சாவந்தும், மூத்த அமைச்சரும் எம்ஜிபி கட்சித் தலைவருமான சுதீன் தவாலிகரும் வரவேற்றனர். முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக் குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் அவரால் பேரவைக்கு வர இயலவில்லை.
இந்நிலையில், ஆளுநர் மிருதுளா சின்ஹா சட்டப் பேரவையில் ஆற்றிய உரை வருமாறு:
விவசாயிகளின் வருவாயை வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக்க எனது அரசு உறுதிபூண்டுள்ளது. இது மாநிலத்தின் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகும். இதைச் சாதிப்பதற்காக தரிசு நிலங்களை அடையாளம் காண்பதற்கும், கூட்டுறவு வேளாண்மைக்கு அவற்றைப் பயன்படுத்தவும் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தொழில்நுட்பம், நவீன சாதனங்கள் மற்றும் மானியங்கள் ஆகியவற்றை அளிப்பதன் மூலம் இத்திட்டத்தை மேற்கொள்ளவோம்.
மாநிலத்தில் உள்ள தரிசு நிலங்களை அடையாளம் காணும் பணி முடிவடைந்துள்ளது. தற்போது அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. உள்ளூர் வேளாண் விளைபொருட்களுக்கான தேவையை அதிகரிப்பதற்காக உணவுப் பூங்காக்களை இளைஞர்கள் தொடங்குவதை அரசு ஊக்குவித்து வருகிறது.
மாநில அரசானது முதல்வரின் தினசரி தொழில் வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இளம் தொழில் முனைவோர் பல்வேறு தொழில்களைத் தொடங்க நிதியளிப்பதற்காக ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 300 பேருக்கும் அதிகமானோர் இறப்பது அரசின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. தவிர, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விபத்துகளில் காயமடைகின்றனர். விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க அரசு பல்வேறு நவடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தில் குற்றங்களின் விகிதம் குறைந்துள்ள அதே வேளையில், குற்றங்களைக் கண்டறியும் விகிதம் 
அதிகரித்துள்ளது. கோவாவின் கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியான "சாகர் கவச்' சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியை பாதுகாப்புப் பிரச்னைகள் ஏதுமின்றி மாநில அரசு வெற்றிகரமாக நடத்தியுள்ளது. 
உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக உணவுப் பாதுகாப்பு சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 5.43 பேருக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டன என்றார் ஆளுநர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com