சீனாவின் பொருளாதாரத் வழித்தடத் திட்டத்துக்கு மாற்றாக அமெரிக்கா, ஜப்பானுடன் இணைந்து புதிய திட்டம்: இந்தியா பேச்சுவார்த்தை

சீனாவின் 'ஒன் பெல்ட், ஒன் ரோட்' (ஒ.பி.ஒ.ஆர்.) பொருளாதார வழித்தடத் திட்டத்துக்கு மாற்றாக, புதிய பொருளாதார வழித்தடத் திட்டத்தை தொடங்குவது குறித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா,

சீனாவின் 'ஒன் பெல்ட், ஒன் ரோட்' (ஒ.பி.ஒ.ஆர்.) பொருளாதார வழித்தடத் திட்டத்துக்கு மாற்றாக, புதிய பொருளாதார வழித்தடத் திட்டத்தை தொடங்குவது குறித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் இருக்கும் நாடுகளிடையே சாலைகள், கடல் மார்க்கமாக இணைப்பை ஏற்படுத்தும் வகையில் சீனா 'ஒன் பெல்ட், ஒன் ரோட்' (ஒ.பி.ஒ.ஆர்.) எனும் பெயரில் பொருளாதார வழித்தடத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியாக செயல்படுத்தப்படுகிறது.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதை சீனா கண்டுகொள்ளவில்லை. இதனால், இத்திட்டம் தொடர்பாக சீனாவில் நடைபெற்ற விழாவில் மாநாட்டிலும் இந்தியா கலந்து கொள்ளவில்லை. இந்தியாவின் எதிர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், சீனாவின் திட்டத்துக்கு வெளிப்படையாக தங்களது எதிர்ப்பை தெரிவிக்க தொடங்கின.
இந்நிலையில், சீனாவின் 'ஒன் பெல்ட், ஒன் ரோட்' (ஒ.பி.ஒ.ஆர்.) பொருளாதார வழித்தடத் திட்டத்துக்கு மாற்றாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து புதிய திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஸ்திரேலியன் 
பைனான்சியல் ரிவியூ எனும் பத்திரிகை உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசு மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், 'அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகளும் சேர்ந்து புதிய பொருளாதார வழித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கின்றன; அமெரிக்காவில் இந்த வாரம் ஆஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல் சுற்றுப்பயணம் செய்யும்போது, இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட மாட்டாது. இந்தத் திட்டம், சீனாவின் திட்டத்துக்கு எதிரானது அல்ல; மாற்றுத் திட்டமாகும்' என்றார்.
தென்சீனக் கடல், இந்திய பெருங்கடல் உள்ளிட்ட கடல்பகுதிகளில் சீனாவின் தீவிர செயல்பாட்டை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் இணைந்து செயல்படுவது குறித்து, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளும் கடந்த ஆண்டு முதன்முறையாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தின. இதையடுத்து, சீனாவின் 'ஒன் பெல்ட், ஒன் ரோட்' (ஒ.பி.ஒ.ஆர்.) பொருளாதார வழித்தடத் திட்டத்தக்கு மாற்றாக புதிய திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் 4 நாடுகளும் ஈடுபட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் சர்வதேச அளவில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com