டோக்கா லாம் விவகாரம்: நிலைமை சீராகி விட்டது- ராணுவ தலைமை தளபதி விளக்கம்

டோக்கா லாமில் தற்போது நிலைமை சீராகி விட்டதாக இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் தெரிவித்தார்.
டோக்கா லாம் விவகாரம்: நிலைமை சீராகி விட்டது- ராணுவ தலைமை தளபதி விளக்கம்

டோக்கா லாமில் தற்போது நிலைமை சீராகி விட்டதாக இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் தெரிவித்தார்.
பூடான் நாட்டின் எல்லையில் உள்ள டோக்கா லாம் பகுதியை நோக்கி, சீனா சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இப்பகுதியில் சீனா சாலை அமைத்தால், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, பூடான் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களை கையாளும் நாடு என்ற முறையில், சீனாவின் சாலை அமைக்கும் முயற்சியை இந்தியா தடுத்து நிறுத்தியது.
இதனால், டோக்கா லாம் பகுதியில் சீனா-இந்திய ராணுவ வீரர்கள் இடையே சுமார் 73 நாள்கள் முற்றுகை நீடித்தது. இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே எந்நேரமும் மோதல் மூளலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இருப்பினும், இரு நாட்டு தலைவர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, டோக்கா லாமில் நிறுத்தப்பட்டிருந்த படைகளை இந்தியாவும், சீனாவும் திரும்பப் பெற்றன.
அதேநேரத்தில், டோக்கா லாமில் சீனா தனது பாதுகாப்பு நிலைகளை வலுப்படுத்தி வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.
இதுகுறித்து தில்லியில் இந்திய ராணுவ தலைமை தளபதி விபின் ராவத்திடம் செய்தியாளர்கள் புதன்கிழமை கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், 'கவலைப்பட எதுவுமில்லை; தற்போது நிலவரம் சீராகி விட்டது' என்றார்.
இதனிடையே, தில்லி சவுத் பிளாக் பகுதியில் விபின் ராவத்தை, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் புதன்கிழமை சந்தித்தனர். அப்போது அவர்கள் மத்தியில் விபின் ராவத் பேசுகையில், 'துப்பாக்கிகளை யாரும் கைகளில் எடுக்கக் கூடாது; மாணவர்கள் நன்றாக பயின்று, கடினமாக பணியாற்றினால் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதனால் இந்த சமுதாயத்துக்கும் நன்மை ஏற்படும். மணிப்பூரில் அமைதி நிலவுவது அவசியம். 
மணிப்பூரில் அமைதி நிலவுவதை மாணவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com