தேசத் துரோக வழக்கை ரத்து செய்யக்கோரும் ஹார்திக் படேலின் மனு தள்ளுபடி

படேல் சமூக போராட்டக் குழுத் தலைவர் ஹார்திக் படேல், தன்மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேச துரோக வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை ஆமதாபாத் நீதிமன்றம்
தேசத் துரோக வழக்கை ரத்து செய்யக்கோரும் ஹார்திக் படேலின் மனு தள்ளுபடி

படேல் சமூக போராட்டக் குழுத் தலைவர் ஹார்திக் படேல், தன்மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேச துரோக வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை ஆமதாபாத் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து விட்டது.
இதுதொடர்பாக ஹார்திக் படேல் தாக்கல் செய்த மனு, ஆமதாபாதில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திலிப் மஹிதா முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஹார்திக் படேலுக்கு எதிராக தேசத் துரோக வழக்குப்பதிவு செய்ய ஆதாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து நீதிபதி கூறுகையில், 'குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு (ஹார்திக் படேல்) எதிராக, அவரது பேச்சுகள், உரையாடல்கள், தடயவியல் ஆதாரம் ஆகியவை ஆதாரங்களாக இருக்கின்றன. இதேபோல், தினேஷ் பம்பானியா, சிராக் படேல் ஆகியோருக்கு எதிராகவும் ஆதாரங்கள் இருக்கின்றன. இதில் இருந்து, அவர்கள் குற்றச்சதியில் ஈடுபட்டதும், தங்களது கோரிக்கைகளை ஏற்கும்படி மாநில அரசை மிரட்டியது, மாநில அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்தது தெரிகிறது. ஆதலால், தங்கள் மீது ஆமதாபாத் குற்றவியல் போலீஸார் பதிவு செய்த தேசத் துரோக வழக்கை ரத்து செய்யக்கோரி ஹார்திக் படேல் தாக்கல் செய்கிக்கும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று நீதிபதி குறிப்பிட்டார்.
குஜராத்தில் படேல் சமூகத்துக்கு இட ஒதுக்கீடு கோரி படேல் போராட்டக் குழுவினர் கடந்த 2015ஆம் ஆண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹார்திக் படேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலவரம் மூண்டது. இதில் 13 பேர் பலியாகினர். சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான அரசு சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.
இந்த கலவரம் தொடர்பாக ஹார்திக் படேல், தினேஷ் பம்பானியா, சிராக் படேல் உள்ளிட்டோருக்கு எதிராக ஆமதாபாத் குற்றவியல் போலீஸார் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, ஹார்திக் படேல் தாக்கல் செய்த மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீசிமன்றத்தில் ஹார்திக் படேல் மனு தாக்கல் செய்துள்ளார். எனினும், இவ்வழக்கில் ஹார்திக் படேலுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு ஜாமீன் அளித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com