நாகாலாந்துக்கு நிலையான அரசு தேவை: பிரதமர் மோடி

'நாகாலாந்து மாநிலத்துக்கு வலிமையான மற்றும் நிலையான அரசு தேவை. அதற்கு பாஜக-தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்' என்றும் பிரதமர் நரேந்திர மோடி
கொஹிமா நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி.
கொஹிமா நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி.

'நாகாலாந்து மாநிலத்துக்கு வலிமையான மற்றும் நிலையான அரசு தேவை. அதற்கு பாஜக-தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்' என்றும் பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில மக்களிடம் வலியுறுத்தினார்.
நாகாலாந்தில் வரும் 27-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 60 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் டி.ஆர்.ஜீலியாங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது.
சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கட்சிகளின் மூத்த தலைவர்கள் நாகாலாந்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொஹிமா நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாகாலாந்தில் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது பாஜகவின் பிரதான குறிக்கோள். அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி செய்து தரப்படும். இம்மாநிலத்தில் மத்திய அரசின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 500 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைத்துத் தரப்பட்டுள்ளது. மேலும், சாலைகளை அமைப்பதற்காக ரூ.10ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு 1 ரூபாய் தருகிறது என்றால் அதில் 15 பைசா மட்டுமே கிராம மக்களுக்குச் சென்றடையும் என்று முன்னாள் பிரதமர் ஒருவர் தெரிவித்தார். பாஜக இங்கு ஆட்சிக்கு வந்தால், அரசின் நிதி விரயமாகாமல் தடுக்கப்படும். பொதுமக்களின் வரிப் பணம் பாதுகாக்கப்படும்.
இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டும். நாகாலாந்து முழுவதும் மின்சார வசதி செய்துத் தரப்படும். இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான எல்இடி விளக்குகள் நாகாலாந்துக்கு அளிக்கப்பட்டுள்ளன.
கொஹிமா நகரை பொலிவுறு நகரமாக மாற்ற மத்திய அரசு ரூ.1,800 கோடி ஒதுக்கீடு செய்யும் என்றார் பிரதமர் மோடி.
சட்டப் பேரவைத் தேர்தலில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி 40 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்துகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com