மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: அண்ணா ஹசாரே

விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கடைபிடிக்கும் மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு நாட்டு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: அண்ணா ஹசாரே

விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கடைபிடிக்கும் மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு நாட்டு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே வலியுறுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, இதுகுறித்து அவர் பேசியதாவது:
தேர்தலில் வசீகரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, விவசாயிகள் நலன்களை காப்பதில் தோல்வியடைந்து விட்டது. விவசாயிகளைக் காட்டிலும், தொழிலதிபர்கள் நலன்கள் குறித்துதான் மோடி அரசு அதிக கவலைப்படுகிறது.
இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு, அவர்களது உழைப்புக்குரிய வருமானம் கிடைப்பதில்லை. தங்களது விவசாயத் தயாரிப்பு பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை பெறுவதற்கு கூட, விவசாயிகள் போராடி கொண்டிருக்கின்றனர்.
விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, விவசாய ஆணையத்தை அமைத்து, அதற்கு அரசியலமைப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும். விவசாயிகள் பிரச்னைகளை முன்வைத்து, மார்ச் மாதம் 23ஆம் தேதியிலிருந்து, மத்திய அரசுக்கு எதிராக தில்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டத்தை தொடங்கவுள்ளேன்.
பிரதமர் நரேந்திர மோடி முன்பு பேசியேபாது, ஊழலில் நானும் ஈடுபட மாட்டேன்; மற்றவர்களையும் ஊழலில் ஈடுபட அனுமதிக்க மாட்டேன் என்றார். ஆனால் அவரது வாக்குறுதிக்கு மாறாக, ஊழல் விவகாரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கிறது. இது மோடியின் செயல்பாடு மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே பொது மக்கள் விழித்துக் கொண்டு, மக்கள் நலனுக்காக பணியாற்றக் கூடிய அரசை தேர்வு செய்ய வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது.
இந்தியாவில் தற்போதைய நிலவரம் மிகவும் கவலையளிக்கும் வகையிலும், பரிதாபகரமானதாகவும் உள்ளது. 
ஜனநாயக நாட்டில் அரசை தேர்வு செய்யும் பொறுப்பு, நாட்டு மக்களிடமே உள்ளது. ஆதலால், ஜனநாயக வழியில், மத்திய அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஹசாரே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com