ஓரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி: பஞ்சாப் முதல்வரின் மருமகன் மீது சிபிஐ வழக்குப் பதிவு! 

ஓரியண்டல் வங்கியில் சிம்போலி சர்க்கரை ஆலை ரூ.109 கோடி பண மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மருமகன் குர்பால் சிங் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஓரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி: பஞ்சாப் முதல்வரின் மருமகன் மீது சிபிஐ வழக்குப் பதிவு! 

சண்டிகர்: ஓரியண்டல் வங்கியில் சிம்போலி சர்க்கரை ஆலை ரூ.109 கோடி பண மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மருமகன் குர்பால் சிங் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தினை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருவது சிம்போலி சர்க்கரை ஆலை. இது நாட்டின் மிகப்பெரிய சர்க்கரை ஆலையாகும்.இந்த ஆலையானது சண்டிகரில் உள்ள ஓரியண்டல் வங்கி கிளையில் தொழில் வளர்ச்சிக்காக என்று ரூ.109 கோடி அளவில் கடன் பெற்று அதனைத் திரும்பச் செலுத்தவில்லை என்று சிபிஐயிடம் வங்கி புகார் செய்தது.

அதனைத் தொடர்ந்து வியாழன் அன்று சிம்போலி சர்க்கரை ஆலை குழுமத் தலைவர் குர்மித் சிங் மான், தலைமைச் செயல் அதிகாரி ராவ், தலைமை நிதி அலுவலர் சஞ்சய் தப்ரியா, செயல் இயக்குநர் குர்சிம் கவுர் மான் மற்றும் அந்நிறுவனத்தின் சில அதிகாரிகள், வங்கி அலுவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் திங்களன்று இந்த பண மோசடியில் தொடர்பு இருப்பதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மருமகன் குர்பால் சிங் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com