காங்கிரஸை விட்டு நான் நீக்கப்பட்டது கட்சியின் மரபுகளுக்கு எதிரானது: சதீஷ் சதுர்வேதி

காங்கிரஸை விட்டு நான் நீக்கப்பட்டது கட்சியின் மரபுகளுக்கு எதிரானது: சதீஷ் சதுர்வேதி

காங்கிரஸை விட்டு நான் நீக்கப்பட்டது கட்சியின் பாரம்பரியத்துக்கும் மரபுகளுக்கும் விரோதமானது என்று மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மூத்த தலைவரான சதீஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸை விட்டு நான் நீக்கப்பட்டது கட்சியின் பாரம்பரியத்துக்கும் மரபுகளுக்கும் விரோதமானது என்று மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மூத்த தலைவரான சதீஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
 அவர் நாகபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். அவரை கட்சியை விட்டு நீக்குவதாக காங்கிரஸ் அண்மையில் அறிவித்தது. இது தொடர்பாக சதீஷ் சதுர்வேதி கூறியதாவது:
 எனது கடைசி மூச்சு வரை காங்கிரஸ் தொண்டராகவே இருப்பேன். மும்பை மற்றும் நாகபுரியைச் சேர்ந்த காங்கிரஸார் சிலர் மதவாத சக்திகளுக்கு உதவுவதன் மூலம் கட்சியை பலவீனப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நபர்கள் தங்களின் தீய நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக என் மீது கட்சி நடவடிக்கை எடுப்பதற்கு சதி செய்துள்ளனர்.
 என்னை கட்சியை விட்டு நீக்கியுள்ளது தொடர்பாக நான் பத்திரிகைச் செய்திகளைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். இது தொடர்பாக மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டியிடம் இருந்து எனக்கு அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வரவில்லை.
 என்னை ஒரு காங்கிரஸ்காரராக என் கல்லூரிக் காலத்தில் இருந்து நிலைநிறுத்தி வந்துள்ளேன். கட்சியின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட நான் கடந்த 52 ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வந்தேன். மகாத்மா காந்தி, பண்டித ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, சோனியா மற்றும் ராகுல் ஆகியோரின் கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் இதை மேற்கொண்டேன். நாகபுரி நகரில் காங்கிரஸ் கட்சி தலைநிமிர்ந்து நிற்கக் காரணமாக இருந்தேன். இந்த நகரில்தான் ஆர்எஸ்எஸ் தலைமையகமும் உள்ளது. அனுபவமே இல்லாத புதியவர்களை காங்கிரஸ் தலைமை வரவேற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் கட்சியில் இருந்த நான் தற்போது நீக்கப்படுவது முரணாக உள்ளது.
 கட்சியின் நம்பகத்தன்மையை சிதைத்த சதியாளர்கள் குறித்து நான் கட்சி மேலிடத்திடம் தொடர்ந்து எடுத்துக் கூறுவேன் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com