3200 கோடி மதிப்புள்ள இஸ்ரேலின் 'ரபேல்' ஏவுகணை ஒப்பந்தத்தினை ரத்து செய்தது இந்தியா!

இஸ்ரேலின் 'ரபேல்' நிறுவனத்துடன் உறுதி செய்யப்பட்ட 3200 கோடி மதிப்புள்ள 'ஸ்பைக்' ஏவுகணை   ஒப்பந்தத்தினை இந்தியா ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3200 கோடி மதிப்புள்ள இஸ்ரேலின் 'ரபேல்' ஏவுகணை ஒப்பந்தத்தினை ரத்து செய்தது இந்தியா!

ஜெருசலேம்: இஸ்ரேலின் 'ரபேல்' நிறுவனத்துடன் உறுதி செய்யப்பட்ட 3200 கோடி மதிப்புள்ள 'ஸ்பைக்' ஏவுகணை   ஒப்பந்தத்தினை இந்தியா ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் புகழ்பெற்ற ஆயுத தயாரிப்பு நிறுவனமான 'ரபேல்' நிறுவனத்தின் தயாரிப்பு 'ஸ்பைக்' ஏவுகணைகள். டாங்கிகளில் பொருத்தப்பட்டு வழிகாட்டுதலின்படி எதிரி ஏவுகணைகளை எதிர்த்து அழிக்கக் கூடியவையாக இவை உருவாக்கப்பட்டுள்ளன. உலகின் 26 நாடுகளில் இந்த ஏவுகணைகள் பயன்டுத்தப்படுகின்றன.

இந்நிலையில் இந்திய பாதுகாப்புத் துறைக்கு என இந்த ஏவுகணைகளை வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டு தீவிர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. பல்வேறு கட்டங்களிலான நிபந்தனைகள் மற்றும் தர நிர்ணயங்களுக்குப் பிறகு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் 'ரபேல்' நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட 3200 கோடி மதிப்புள்ள 'ஸ்பைக்' ஏவுகணை   ஒப்பந்தத்தினை இந்தியா ரத்து செய்துள்ளதாக, 'ரபேல்'  நிறுவன செய்தித் தொடர்பாளர் இஷாய் டேவிட் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்திற்காக நிறைய சுற்று பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு, தர நிர்ணயங்களைப் பூர்த்தி செய்த பின்பு கையெழுத்தாகும் நிலையில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என்று அந்நிறுவனத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இஸ்ரேலின் பிரதமரான பெஞ்சமின் நெதென்யாஹு முதன்முறையாக விரைவில் இந்தியா வரவுள்ள நிலையில் இந்த் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com