ஐ.நா. அலுவல் மொழியாக ஹிந்தியை அங்கீகரிக்க விதிமுறைகள் அனுமதிக்கவில்லை

'ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தியை அங்கீகரிக்க ரூ.400 கோடி தேவைப்பட்டாலும் மத்திய அரசு கொடுக்கத் தயாராக உள்ளது; எனினும், ஐ.நா. வகுத்துள்ள விதிமுறைகள்
ஐ.நா. அலுவல் மொழியாக ஹிந்தியை அங்கீகரிக்க விதிமுறைகள் அனுமதிக்கவில்லை

'ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தியை அங்கீகரிக்க ரூ.400 கோடி தேவைப்பட்டாலும் மத்திய அரசு கொடுக்கத் தயாராக உள்ளது; எனினும், ஐ.நா. வகுத்துள்ள விதிமுறைகள் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் இதுதொடர்பாக புதன்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து சுஷ்மா கூறியதாவது:
ஐ.நா. சபையின் விதிமுறைகளின்படி, அந்த அவையின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளில் (193), மூன்றில் 2 பங்கு நாடுகள் (129) ஹிந்தியை அலுவல் மொழியாக அறிவிக்க ஆதரவளிக்க வேண்டும். அத்துடன், அதற்கு ஏற்படும் செலவையும் அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்க வேண்டும். செலவை ஏற்க சில சிறிய நாடுகள் தயக்கம் காட்டுகின்றன. 
ஹிந்தியை ஐ.நா. அலுவல் மொழியாக அறிவிக்க மத்திய அரசு ரூ.40 கோடி அளிக்க வேண்டும். ரூ.40 கோடி மட்டுமல்ல, ரூ.400 கோடி அளிக்கக் கூட மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால், ஐ.நா. விதிமுறைகள் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.
இருப்பினும், மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.
அப்போது, 'ஹிந்தி தேசிய மொழி அல்ல; தேசத்தின் அலுவல் மொழி மட்டுமே. அவ்வாறு இருப்பின் ஹிந்தியை ஏன் ஐ.நா. அலுவல் மொழியாக அறிவிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது?' என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் கூறுகையில், 'தமிழகம் அல்லது மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஒருவர், நாட்டின் பிரதமராக ஆகும்பட்சத்தில், அவர் எதற்காக ஐ.நா. சபையில் ஹிந்தியில் உரை நிகழ்த்த நாம் நிர்பந்திக்க வேண்டும்' என்றும் அவர் கேட்டார்.
அவருக்கு பதிலளிக்கும் வகையில், 'ஃபிஜி தீவுகள், மோரீஷஸ், சுரிநாம், டிரினிடாட் ஆகிய தேசங்களில் ஹிந்தி அலுவல் மொழியாக இருக்கிறது என்பதை சசி தரூர் அறிவாரா?' என்று சுஷ்மா பதில் கேள்வி எழுப்பினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com