அமெரிக்காவுக்கு சவால்விடும் கார்டோசாட்!

இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ள கார்டோசாட் வரிசை செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் விண்வெளி தொழில்நுட்பத்துக்கே சவால்விடும் வகையில் அமைந்துள்ளன.
அமெரிக்காவுக்கு சவால்விடும் கார்டோசாட்!

இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ள கார்டோசாட் வரிசை செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் விண்வெளி தொழில்நுட்பத்துக்கே சவால்விடும் வகையில் அமைந்துள்ளன.

கார்டோசாட் 1: கார்டோசாட் வரிசையின் முதல் செயற்கைக்கோள், 2005 -ஆம் ஆண்டு மே மாதம் 5 -ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் வழங்கும் புகைப்படங்கள் உலகளாவிய பங்கீட்டுக்கு ஏதுவாக கிடைக்கிறது. ஒட்டுமொத்த பூமியையும் 126 நாள்கள் சுழற்சியில், 1,867 சுற்றுப்பாதைகளில் கருப்பு வெள்ளையில் முப்பரிமாணப் படங்களாக எடுக்கும் திறன்கொண்ட இச்செயற்கைக்கோளின் ஆயுள் காலம் முடிந்துவிட்டது. 

கார்டோசாட் -2: இதையடுத்து, 2007 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 -ஆம் தேதி இந்தச் செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. கார்டோசாட்-2 செயற்கைக்கோளில் உயர்தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்தக் கேமராக்கள் 9.6 கி.மீ அகலத்தில் புவியை படம் பிடிக்கும் தன்மைகொண்டதாக இருந்தன. கார்டோசாட்- 2 செயற்கைக்கோளை 45 டிகிரி அளவில் பூமியை நோக்கியும், அதேபோல் அதன் சுற்றுப்பாதையை நோக்கி திருப்பவும் முடியும். ஒரு குறிப்பிட்ட காட்சிப் புள்ளியை ஒளிப்படத் தொகுதிகளாகத் தரும் அளவுக்கு கார்டோசாட் -2 செயற்கைக்கோள் மேம்பட்ட ஒரு தொலையுணர்வு செயற்கைக்கோளாகும். இந்த செயற்கைக்கோளின் புகைப்படங்களை விவரமான வரைப்படங்கள் தயாரித்தல், பிற நிலப்பட வரைவியல் பணிகளில் ஈடுபடுதல், கிராமப்புற மற்றும் நகர கட்டுமான மேம்பாட்டுத் திட்டங்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்துகின்றன.

கார்டோசாட் 2 ஏ: 2008 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 -ஆம் தேதி இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்காக பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட செயற்கைக்கோளாகும். இக்காலகட்டத்தில் இந்திய விமானப் படை, வான் பாதுகாப்புக்காக புதிய படையமைப்பை அமைத்துக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கார்டோசாட்-2பி: 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 -ஆம் தேதி சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்டது. இச்செயற்கைக்கோளில் நவீன புகைப்படக் கருவி பொருத்தப்பட்டிருந்தது. இக்கருவி கருப்பு வெள்ளையில் முப்பரிமாணப் படங்களை எடுக்ககூடியதாக இருந்தது. கார்டோசாட்- 2பி செயற்கைக்கோள் பூமியின் அனைத்து திசையிலும் திரும்பி படமெடுக்க கூடிய வகையில் தயாரிக்கப்பட்டது. 

கார்டோசாட்- 2சி: 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 -ஆம் ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதன் உதவியால் நீர்வள மேம்பாடு, காடுகள் பாதுகாப்பு மற்றும் பெருநகர குடியிருப்புகளை செம்மைப்படுத்துதல் போன்ற செயல்களை கட்டுப்படுத்த முடியும். 

மின்காந்த நிறமாலையில் செயல்படும் வகையில், சிறப்பு கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. வினாடி துளிகளில் பூமியின் எந்த பகுதியையும் மிகவும் தெளிவாக படம் பிடித்து தள்ளும் சிறப்புமிக்கது. முக்கியமான பகுதிகளை விடியோவாகவும், நீண்ட புகைப்படமாகவும் எடுக்கும் திறன் படைத்தது. இதன்பின் விண்ணில் சென்ற கார்டோசாட் செயற்கைக்கோள்கள் அனைத்தும் சிறப்பான பணியை செய்து வருகின்றன. 

கார்டோசாட் -2சியின் செயல்பாடுகள், அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் விண்வெளி தொழில்நுட்பத்தைவிட மிகச்சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com