சந்திராயன் -2 விண்கலம் மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் கிரண் குமார்

பிஎஸ்எல்வி சி -40 ராக்கெட் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த சாதனை நிகழ்வுக்கு பின், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் ஏ.எஸ். கிரண் குமார்
சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிஎஸ்எல்வி சி -40 ராக்கெட் மற்றும் கார்டோசாட் 2 வரிசை செயற்கைக்கோளின் மாதிரியுடன் பிஎஸ்எல்வி திட்ட இயக்குநர் ஹட்டன், 
சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிஎஸ்எல்வி சி -40 ராக்கெட் மற்றும் கார்டோசாட் 2 வரிசை செயற்கைக்கோளின் மாதிரியுடன் பிஎஸ்எல்வி திட்ட இயக்குநர் ஹட்டன், 

பிஎஸ்எல்வி சி -40 ராக்கெட் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த சாதனை நிகழ்வுக்கு பின், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் ஏ.எஸ். கிரண் குமார் செய்தியாளர்களிடம் கூறியது:
பல செயற்கைக்கோள்களை ஒரே சுற்றுப்பாதையில் செலுத்தும் ஆற்றலை பெற்றிருக்கும் இ ஸ்ரோ, பல்வேறு சுற்றுப்பாதைகளில் அவற்றை செலுத்தும் ஆற்றலை தற்போது பெற்றுள்ளது. இஸ்ரோ வடிவமைத்து, கட்டமைத்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ள கார்டோசாட் -2 செயற்கைக்கோள், இந்த வரிசையில் தயாரிக்கப்பட்டு செலுத்தப்பட்ட 7 ஆவது செயற்கைக்கோளாகும். இது பயனீட்டாளர்களுக்கு மிகுதிப்படுத்தப்பட்ட தரவுகளை வழங்கும். தொலையுணர்வு செயற்கைக்கோளான இதில் மிகவும் நுணுக்கமான புகைப்படம் எடுக்கும் வசதி உள்ளது. இந்த வசதியைக் கொண்டு நிலவிவரப் படங்கள் தயாரிக்க முடியும். நகர்புற மற்றும் ஊரக நில விவரங்களின் பயன்பாட்டுக்கு இந்த செயற்கைக்கோள் பெரிதும் உதவும்.
பிஎஸ்எல்வி சி -40 ராக்கெட்டில் பயணித்த மற்றொரு நுண் செயற்கைக்கோள், 100 கிலோ வகையை சேர்ந்தது. இந்த வகை செயற்கைக்கோள்கள் எதிர்காலத்தில் தயாரிக்கப்படுவதற்கு தொழில்நுட்ப வழிகாட்டியாக இந்த செயற்கைக்கோள் அமையும்.
இஸ்ரோ தயாரித்துள்ள மற்றொரு மிகநுண் செயற்கைக்கோள் சி -40, இந்திய நானோ செயற்கைக்கோள் 1 -சி இந்த வகை செயற்கைக்கோளில் 3-ஆவது ஆகும். நிலப்பரப்பு வரைபடம் எடுத்தல், மேகமூட்டங்களை கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும். இதன் மொத்த எடை 11 கிலோ . இந்தியாவின் ஆராய்ச்சிக் கலன்களை மெதுவாக சந்திரனில் தரையிறங்கச் செய்யும் சந்திரயான்-2 விண்கலம், மார்ச் மாதம் விண்ணில் செலுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் கிரண் குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com