நவீன தொழில்நுட்ப குற்றங்களை கண்டுபிடிக்க புதிய பரிவு: தில்லி போலீஸில் தொடக்கம்

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க, நாட்டிலேயே முதல் முறையாக தொழில்நுட்ப பரிவை தில்லி போலீஸ் தொடங்கியுள்ளது.

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க, நாட்டிலேயே முதல் முறையாக தொழில்நுட்ப பரிவை தில்லி போலீஸ் தொடங்கியுள்ளது.
இந்தப் பிரிவின் தலைமை அதிகாரிக்கு தலைமை தொழில்நுட்ப அதிகாரி (சிடிஓ) என்று பெயரிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவும், விசாரிக்கவும் தில்லி போலீஸுக்கு தேவைப்படும் அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்துவது குறித்து இந்த தலைமை தொழில்நுட்ப அதிகாரி பரிந்துரைப்பார்.
இந்திரா காந்தி தில்லி தொழில்நுட்ப மகளிர் பல்கலைக்கழகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைவர் ஏ.கே. முஹபத்ரா, தில்லி போலீஸின் தகவல் தொழில்நுட்ப பரிவின் தலைவராக கடந்த ஜனவரி 1-ம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து முஹபத்ரா கூறுகையில், 'தில்லி போலீஸில் அயற்பணியில் சேர்ந்துள்ளேன். குற்றங்களைத் தடுக்க நவீன தொழில்நுட்பம், தில்லி போலீஸுக்கு எந்த அளவுக்கு பயன்படுத்தலாம் என்பதே என்னுடைய முக்கிய பணியாக இருக்கும்' என்றார்.
சைபர் கிரைம், கிரப்டோகிராப்பி, நெட்வோர்க் செக்யூரிட்டி போன்ற தில்லி போலீஸாரின் பிரிவுகளில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்துவது குறித்து முஹபாத்ரா கவனம் செலுத்துவார் என்று தில்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், தில்லி போலீஸில் உள்ள பல்வேறு துறைகளிலும் நவீன தொழில்நுப்பங்களைப் புகுத்துவது குறித்து தனியார் நிறுவனங்களுடனும் முஹபாத்ரா தொடர்பில் இருப்பார் என்று தில்லி போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com