நீதிபதி செலமேஸ்வரை தனிப்பட்ட முறையிலேயே சந்தித்தார் டி.ராஜா'

உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா தனிப்பட்ட முறையிலேயே சந்தித்ததாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
நீதிபதி செலமேஸ்வரை தனிப்பட்ட முறையிலேயே சந்தித்தார் டி.ராஜா'

உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா தனிப்பட்ட முறையிலேயே சந்தித்ததாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் செலமேஸ்வர் உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் தில்லியில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தனர். அதன் பிறகு செலமேஸ்வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான டி.ராஜா சந்தித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனினும், இது தொடர்பாக ராஜா கூறுகையில் 'எனது மாணவப் பருவத்தில் இருந்தே நீதிபதி செலமேஸ்வரைத் தெரியும் என்பதாலேயே அவரைச் சந்தித்தேன். 
நீதிபதிகள் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்து விட்டதாகவும் இனி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பொதுமக்களும் அரசும் முடிவு செய்யட்டும் என்றும் அவர் என்னிடம் தெரிவித்தார்' என்றார்.
இதனிடையே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பான சர்ச்சையில் தலையிட இந்திய கமம்யூனிஸ்ட் கட்சி விரும்புவதாக எழுந்துள்ள ஊகங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டியிடம் பிடிஐ செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
ராஜா தனிப்பட்ட முறையிலேயே செலமேஸ்வரின் இல்லத்துக்குச் சென்றார். அவர் எங்கள் கட்சியின் பிரதிநிதியாகச் செல்லவில்லை. 
நீதிபதிகள் தொடர்பான சர்ச்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலையிட விரும்புவதாகக் கூறப்படுவது தவறான புரிதலாகும். நீதித்துறைதான் இப்பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமான பிரச்னை.
முன்னாள் தலைமை நீதிபதிகள் மற்றும் பிரபல நீதிபதிககளின் ஆலோசனைகள் கணக்கில் கொள்ளப்படுவதோடு, உச்ச நீதிமன்றத்தின் நம்பகத்தன்மையும், நம்பிக்கையும் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார் சுதாகர் ரெட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com