பிரகாஷ் ராஜ் பங்கேற்ற மேடையை பசுவின் சிறுநீரால் 'புனிதப்படுத்திய' பாரதிய ஜனதா தொண்டர்கள்! 

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்ற மேடையை, பாரதிய ஜனதா தொண்டர்கள் பசுவின் சிறுநீரால் 'புனிதப்படுத்திய' நிகழ்ச்சி கடும் சர்சையைக் கிளப்பியுள்ளது.
பிரகாஷ் ராஜ் பங்கேற்ற மேடையை பசுவின் சிறுநீரால் 'புனிதப்படுத்திய' பாரதிய ஜனதா தொண்டர்கள்! 

கர்வார்: கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்ற மேடையை, பாரதிய ஜனதா தொண்டர்கள் பசுவின் சிறுநீரால் 'புனிதப்படுத்திய' நிகழ்ச்சி கடும் சர்சையைக் கிளப்பியுள்ளது.

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ளது சிர்சி நகரம். இங்குள்ள ராகவேந்திர சுவாமி மடத்தில் ராகவேந்திர சுவாமி அரங்கம் என்ற பெயரில் திருமண அரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அரங்கத்தில் கடந்த ஞாயிறன்று "நமது அரசியலமைப்பு சட்டம்; நமது பெருமை" என்ற பெயரில் கருத்தரங்கம் ஒன்று நடந்துள்ளது. இடதுசாரி அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடு  செய்துள்ளன. இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் சமீப காலமாக பாரதிய ஜனதா கட்சியினையும் அதன் தலைவர்களையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக திங்கள்கிழமை கூட்டத்திலும் அவர் பாஜகவை..குறிப்பாக மத்திய அமைச்சரும் உள்ளூர் எம்.பியுமான அனந்த்குமார் ஹெக்டேவை விமர்சித்துப் பேசியுள்ளார். 

இது பற்றிக் கேள்விப்பட்ட சிர்சி நகர பாஜகவினர் மறுநாள் திரண்டு ராகவேந்திர சுவாமி மடத்திற்கு சென்றுள்ளனர். நிகழ்ச்சி நடைபெற்ற ராகவேந்திர சுவாமி அரங்கம் மற்றும் மடத்தின் சுற்றுப்புற பகுதிகள் அனைத்திலும் பசுவின் சிறுநீரைத் தெளித்துள்ளனர்.

இது தொடர்பாக பாஜக தொண்டர் ஒருவர் கூறியதாவது:

மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்களும் ஹிந்துக் கடவுள்களை விமர்சிப்பவர்களும் சிர்சிக்கும் ராகவேந்திர சுவாமி மடத்திற்கும் வருகை தந்துள்ளனர். சமுகம் அவர்களை மன்னிக்காது. அவர்களின் வருகை காரணமாக மடம் அசுத்தமடைந்து விட்டது. அதை புனிதப்படுத்தவே பசுவின் சிறுநீரைத் தெளித்துள்ளோம்.

இந்த அறிவாளிகள் எல்லாம் சமூக நல்லிணக்கத்திற்காக ஊர்வலம் போகிறாரகள். முதலில் மாட்டுக்கறி உண்பதன் மூலம் மற்ற மதத்தின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்பதனை அவர்கள் உணர வேண்டும். பிறகு மற்ற ஊர்வலங்கள் எல்லாம் போகலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிஜடியூ தொழிற்சங்க உறுப்பினர் ஒருவர், ' பாஜகவினர் ராகவேந்திர சுவாமி அரங்கம் மற்றும் மடத்தின் சுற்றுப்புற பகுதிகளில் பசுவின் சிறுநீரைத் தெளித்ததற்குப் பதிலாக அரசாங்கத்தினை சுத்தபடுத்தி இருக்கலாம். அது பார்க்கவாவது நன்றாக இருந்திருக்கும். அத்துடன் சிர்சி நகரத்தில் பிரகாஷ் ராஜ் ஊர்வலம் போன பாதை முழுவதும் அவர்கள் சுத்தம் செய்தால், அச்செயலானது பாஜகவின் 'தூய்மை இந்தியா; திட்டத்திற்கான சிறந்த முன்னுதாரணமாக இருந்திருக்கும்' என்று தெரிவித்தார்.

இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், 'சிர்சியில் நான் பேசிய அரங்கத்தினை பாஜக தொண்டர்கள் பசுவின் சிறுநீரினைத் தெளித்து புனிதப்படுத்தியுளார்கள். இந்த சுத்தம் செய்து புனிதப்படுத்தும் வேலையை நான் எங்கு போனாலும் அங்கு தொடர்வீர்களா?' என்று கிண்டலாக கேட்டுள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com