ஹரியாணாவிலும் பத்மாவத் திரைப்படத்துக்கு தடை

குஜராத்தைத் தொடர்ந்து, ஹரியாணா மாநிலத்திலும் பத்மாவத் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணாவிலும் பத்மாவத் திரைப்படத்துக்கு தடை

குஜராத்தைத் தொடர்ந்து, ஹரியாணா மாநிலத்திலும் பத்மாவத் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சண்டீகரில் ஹரியாணா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், 'ஹரியாணாவில் பத்மாவத் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது' என்றார்.

முன்னதாக, அமைச்சர் அனில் விஜ் செய்தியாளர்களிடம் பேசியபோது, பத்மாவத் திரைப்படத்தை ஹரியாணாவில் திரையிட அனுமதிக்க மாட்டேன் எனத் தெரிவித்திருந்தார். மேலும் அவர் கூறியபோது, ராணி பத்மாவதி இந்தியப் பெண்களின் அடையாளமாக திகழ்கிறார், அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதை ஒருபோதும் சகித்து கொள்ளப்பட மாட்டாது எனவும் அனில் விஜ் கூறியிருந்தார்.

பிரபல திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பத்மாவத் திரைப்படத்துக்கு முன்பு பத்மாவதி என பெயரிடப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் ராஜபுத்திர ராணி பத்மாவதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, படத்தின் பெயரை பத்மாவத் என மாற்றும்படி மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் நிபந்தனை விதித்தது. இதை திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, அந்தத் திரைப்படத்தை திரையிட மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதியளித்தது. எனவே, இம்மாத இறுதியில் அந்த திரைப்படம் வெளியிடப்பட இருக்கிறது. இருப்பினும், குஜராத்தில் பத்மாவத் திரைப்படத்தை திரையிட அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை தடை விதித்து உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com