ரத்தப் புற்றுநோயை வென்று தேசிய சாம்பியனான குத்துச்சண்டை வீரர்

புது தில்லியில் நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பை 2017-18 போட்டியில் வெற்றி பெற்று கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிரிஷ் ஆர். கௌடா (31) தங்கப் பதக்கம் வென்றார்.
ரத்தப் புற்றுநோயை வென்று தேசிய சாம்பியனான குத்துச்சண்டை வீரர்


பெங்களூர்: புது தில்லியில் நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பை 2017-18 போட்டியில் வெற்றி பெற்று கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிரிஷ் ஆர். கௌடா (31) தங்கப் பதக்கம் வென்றார்.

81 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கௌடாவின் போராட்டம் குத்துச் சண்டைக் களத்தில் மட்டுமல்ல. அவர் உண்மையில் தனது வாழ்க்கையிலேயே மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்துள்ளார்.

ரத்தப் புற்றுநோய் பாதித்து கடந்த 9 மாதங்களாக சிகிச்சை எடுத்து நோயுடன் போராடி வென்ற கௌடா தற்போது குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றி பெற்றிருப்பது பல வீரர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகவும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கௌடாவுக்கு மிகத் தீவிர ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது முதல், இதுநாள் வரை தொடர்ந்து நோயுடன் போராடி வந்த கௌடா, குத்துச்சண்டை போட்டியில் பெற்றிருக்கும் வெற்றியானது அவரது வாழ்வின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு நான் பங்கேற்கும் முதல் போட்டி இது. தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் நான் பெறும் 9வது தங்கப் பதக்கம் இது. கடந்த ஆண்டு முழுவதும் சிகிச்சை, வலி, ஏமாற்றங்களால் துவண்டு போயிருந்த எனக்கு இந்த வெற்றி புத்துணர்ச்சியை அளிக்கிறது என்கிறார் உற்சாகத்தோடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com