வைஃபை வசதியுடன் பறக்க தயாராகுங்கள்: விரைவில் வருது புது சேவை!

விமானத்தில் பயணிக்கும்போதே வைஃபை வசதி பயன்படுத்தும் விதத்தில் புதிய சேவை விரைவில் வரவுள்ளது.
வைஃபை வசதியுடன் பறக்க தயாராகுங்கள்: விரைவில் வருது புது சேவை!

இனி வரும் காலங்களில் விமானப் பயணத்தின் போது நடுவானில் வைஃபை வசதியைப் பயன்படுத்தி இணைய சேவையைப் பெறும் வகையிலான புதிய அறிவிப்பை டிராய் நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இதன்மூலம் இந்திய எல்லைக்குட்பட்ட வான்வழிப் பயணங்களின் போது இந்த சேவையை பெறும் வகையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொலைதொடர்புத்துறை கோரிக்கைகளின் அடிப்படையில் ஆலோசிக்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதனால், இந்திய எல்லையில் பயணிக்கும் இந்திய மற்றும் அந்நிய விமானங்களில் உள்ள பயணிகள் இந்த சேவையைப் பெற முடியும். இது உலகத் தரத்துக்கு இருக்க வேண்டும் எனவும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், இதில் சில நிபந்தனைகளும் இடம்பெற்றுள்ளன. அதன்படி, பயணிக்கும் விமானம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 3,000 அடி உயரத்துக்குள்ளாக பறக்க வேண்டும். அதுபோல பயணிகள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை ஃப்ளைட் (அ) ஏரோப்ளேன் மோடுக்கு மாற்றினால் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com