தலைமைத் தேர்தல் ஆணையர் மீது ஆம் ஆத்மி கடும் விமர்சனம்

ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதற்கு, தலைமைத் தேர்தல் ஆணையர்
தில்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வெள்ளிக்கிழமை பேட்டியளிக்கிறார் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ செளரவ் பரத்வாஜ்.
தில்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வெள்ளிக்கிழமை பேட்டியளிக்கிறார் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ செளரவ் பரத்வாஜ்.

ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதற்கு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதியை அக்கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு தலைமை செய்தித் தொடர்பாளர்சௌரவ் பரத்வாஜ் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் உத்தரவானது இயற்கை நீதியின் கொள்கைளுக்கு முரணாக உள்ளது. இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் கருத்துகளை தேர்தல் ஆணையம் விசாரிக்கவில்லை. ஜனவரி 23-ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி ஓய்வு பெற உள்ளார். 
இந்நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் கீழ் (அப்போதைய குஜராத் முதல்வர்) முதன்மைச் செயலராகப் பணியாற்றியவர்தான் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி. இவர் குஜராத் மாநிலத்தின் தலைமைச் செயலராகவும் இருந்தவர். வரும் திங்கள்கிழமை அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஆகவே, அவர் (ஏ.கே.ஜோதி) நரேந்திர மோடிக்கு கடனை திருப்பிச் செலுத்தியுள்ளார். தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு பதவியை அடமானம் வைத்துக் கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையம் முன் நடைபெற்றது தகுதி நீக்கம் தொடர்புடைய விசாரணை அல்ல. சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் பார்லிமென்ட்ரி செயலர்கள் அல்ல என தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், இந்த விவகாரத்தை விசாரிக்க முடியுமா என்பது தொடர்பாகத்தான் தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பாக எந்தத் தகவலும் இன்னும் கட்சிக்கு கிடைக்கவில்லை என்றார் அவர். 
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ஆஷுதோஷ் கூறுகையில், 'தேர்தல் ஆணையம் இந்த அளவுக்கு ஒரு போதும் கீழிறங்கியதில்லை. பிரதமர் அலுவலகத்தின் அஞ்சல் பெட்டியாக தேர்தல் ஆணையம் இருக்கக் கூடாது. ஆனால், இன்றைக்கு அதுதான் யதார்த்தமாக உள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com